தொல்லியல் திணைக்களத்தை வழிநடத்தும் பௌத்த பிக்குகள்- சார்ள்ஸ் எம்.பி. சீற்றம்
தொல்லியல் திணைக்களத்தை வழிநடத்தும் பௌத்த பிக்குகள் - சார்ள்ஸ் எம்.பி. சீற்றம் "வனஇலாகா, வனஜீவராசிகள், மகாவலி, தொல்பொருள் ஆகிய நான்கு திணைக்களங்களும் அமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை. தொல்பொருள் திணைக்களத்தை ஒரு சில பௌத்த பிக்குகள்தான் வழிநடத்துகின்றனர்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். வவுனியாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், "மகாவலி அபிவிருத்தி அதிகார சபை 1970 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அது முழுமையாகத் தமிழர்களது இன விகிதாசாரத்தை இல்லாதொழிப்பதற்காக உருவாக்கப்பட்டது. அதனை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். 1988 ஆம் ஆண்டு மகாவலி எல் வலயம் வர்த்தமானி பிரசுரம் செய்யப்பட்டு இன்று 34 வருடங்கள் முடிவடைந்திருக்கின்றன. அதில் வவுனியா, முல்லைத்தீவு உள்ளடங்களாக பல பிரதேசங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன. அதற்கமைய வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களை அபிவிருத்தி என்ற போர்வையில் தென்பகுதி மக்களுக்கு வழங்கும் செயற