நீங்கள் இன்று வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த கணம்தான், இந்த காலகட்டம்தான், மனித வரலாற்றிலேயே ‘மிக அமைதியான, வன்முறைகள் குறைந்த காலகட்டம்’.
• #நீங்கள் இன்று வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த கணம்தான், இந்த காலகட்டம்தான், மனித வரலாற்றிலேயே ‘மிக அமைதியான, வன்முறைகள் குறைந்த காலகட்டம்’.
• எப்படி?
இதுவரை எமக்கு கிடைத்த மனித குலத்தின் வரலாற்று தகவல்கள் சகலவற்றையும் ஆய்வு செய்ததில், கிடைத்த முடிவுகள் இவை.
இந்த ஆய்வு முடிவுகளை தரவுகளாக,வரைபடங்களாக கீழே தந்திருக்கிறேன்.
இந்த ஆய்வு முடிவுகளினூடாக இன்றைய உலக ஒழுங்கை,அதன் இயங்கும் விதத்தை வேறொரு கோணத்தில் உங்களுக்கு விளக்க முனைவதே இந்த பதிவின் நோக்கம்.
• #நவீன அரசுகள் (States)
எனது பல பதிவுகளில் குறிப்பிட்டதையே மறுபடியும் சொல்கிறேன்.
இந்த உலகின் மிகப் பலம் வாய்ந்த நிறுவனம் இறையாண்மையுள்ள அரசுதான் ( States). இவைகளை மிஞ்சிய அதிகார அமைப்பு வேறு எதுவும் உலகில் இல்லை.
இந்த உலகம், இன்று இருக்கும் 190 சொச்ச இறையாண்மையுள்ள அரசுகளால் இயங்குவது.
இவையே நம்முடைய International System இன் Main Actors.
இந்த அரசுகளில், அவற்றின் பொருளாதார,இராணுவ வலிமையை அடிப்படையாக கொண்டு அவற்றிற்குள் அடுக்குகள் இருக்கின்றன.
ஆனால் இன்றைய உலக ஒழுங்கின் இயக்கமே இந்த அரசுகளை ஆதாரமாக வைத்துத்தான் இயங்குகிறது.
• #நவீன அரசுகளால் இயங்கிய உலகமா அல்லது அரசுகள் அற்ற உலகமா அமைதியை தருகிறது?
பல ஆயிரம் ஆண்டுகால மனித வரலாற்றை ஆராய்ந்து பார்க்கையில், நவீன அரசுகளால் இயங்கும் சமூகமே அமைதியை ஏதோ ஒரு வகையில் உறுதிபடுத்தியிருக்கிறது.
ஒப்பீட்டளவில் நவீன அரசுகளால் இயங்கும் உலகத்தில் வன்முறை பெருமளவு குறைந்திருக்கிறது.
படம் 1 : Rate of Violent Deaths in NonStates and State Societies.
• #இன்றைய நவீன அரசுகளால் உருவான உலக ஒழுங்கு இல்லாத , ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய உலகு எப்படி இருந்தது?
Archaeological studies show that societies in the past were very violent. Often more than 10% of deaths were the result of one person killing another.
அந்த சமூகங்களில், மனிதனால் மனிதன் கொல்லப்படும் மரண வீதமானது அதிகமாக இருப்பதை ஆய்வுகள் காட்டுகின்றன.
படம்2 : Share of violent deaths for archeological sites
• #இனி இன்றைய ‘1945 இற்கு பிறகான உலக ஒழுங்கிற்கு’ வருகிறேன்.
இரண்டாம் உலகப்போர் முடிவிற்கு பிறகு உருவான உலக ஒழுங்கின் ஆரம்பத்திலேயே அமைதியான உலகம் உருவாகிவிடவில்லை.
காலனியாதிக்கத்தில் இருந்து விடுபட முயன்றபோது உருவான யுத்தங்கள், சோவியத்-அமெரிக்கா பனிக்கால போர் தொடங்கியதோடு உருவான யுத்தங்கள் என வன்முறை நிறைந்ததாகவே இருந்தது.
பின்னர் ஒரு விதமான ஸ்திரத்தன்மையை அடைய தொடங்கியது. இன்று இரு அரசுகளுக்கு இடையேயான போர் என்பது அரிதாகவே நடக்கிறது.
• #நவீன அரசுகளுக்கு இடையேயான போர் குறைந்ததற்கான காரணங்கள் என்னென்ன?
உலகெங்கும் கல்வியறிவு சதவீதம்(Literacy Rate) பெருமளவு அதிகரித்ததையும், ஜனநாயக அரசியல் முறைமை கொண்ட அரசுகளின் எண்ணிக்கை அதிகரித்ததையும் முக்கிய காரணங்களாக குறிப்பிடுகிறார்கள்.
• #ஆனால் இவைகளை தாண்டி மேலும் சில காரணங்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன். இது என்னுடைய அனுமானம்.
1) அணு ஆயுதங்களின் இருப்பு
கடந்த 75 வருடங்களில், இன்றைய Great Powers கள் தமக்கிடையே பெரும் யுத்தத்தில் இறங்காமல் இருந்ததற்கான பெரும் தடுப்பாக இருந்தவை அணு ஆயுதங்கள் இரு தரப்பிலும் இருந்ததனாலேயே.
அணு ஆயுதங்களை இரு தரப்பும் கொண்டிருக்கும்போது அதன் போரியல் சமன்பாடு முற்றிலும் வேறுபட்டது என்பதை முன்னர் விளக்கி பதிவொன்று இட்டிருந்தேன். இணைப்பு பின்னூட்டத்தில்.
2) அணு ஆயுதங்கள் இல்லாத நாடுகளை எடுத்துகொண்டாலும் , இன்றைய நவீன ஆயுதங்களின் அழிவை ஏற்படுத்தும் வீச்சு ( destructive power) பெருமளவு இருப்பதால், அணு ஆயுதம் இல்லாத அரசுகள் கூட போரில் இறங்குவதற்கு முன்பு பல முறை யோசிக்கின்றன.
உதாரணமாக இன்று போர் என்பதை வெறும் எல்லை பகுதியிலோ, சில நூறு கிமீ இற்குள்ளேயோ Limited War ஆக எப்போதும் கட்டுப்படுத்தி வைத்திருக்கமுடியாது.
கையை மீறி போர் விரிவடையுமாயின், ஒரு நாட்டின் எந்த மூலையையும் தாக்கக்கூடிய அளவிற்கு பல ஆயிரம் கிமீ பயணம் செய்யும் ballistic missiles களும், cruise missiles களும் இருக்கின்றன.
இன்றைய போர் விமானங்களின் combat radius உம் எதிரி நாட்டின் இதய பகுதியை தாக்ககூடிய அளவிற்கு அதிகரித்துள்ளன.
இந்த தொழில்நுட்ப வளர்ச்சியால் அதிகரித்த நவீன ஆயுதங்களின் அழிவு வீச்சும் நவீன அரசுகள் போரை தவிர்ப்பதற்கான பிரதான காரணம்.
அதே நேரம் புவிசார் அரசியலில், ஒரு Great Power அதனது நலனை தக்கவைக்க போர் ஒன்றை ‘கட்டாயம்’ செய்துதான் ஆகவேண்டும் எனில் அவை போரில் இறங்கும்.
ஆனால் நவீன ஆயுதங்களின் destructive power ஐ கருத்தில்கொண்டு போரை கடைசி தெரிவாக வைத்து கொள்கின்றன.
படம் 3: 1945 இற்கு பின்னர் படிப்படியாக Conflicts between states (நீல நிறம்) குறைந்து வருவதை தெளிவாக காணலாம்.
#இதை தாண்டி இன்னொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டியுள்ளது.
புதிதாக ஒரு இறையாண்மையுள்ள அரசு உருவாக முனையும்போது, உலக ஒழுங்கு உள்ளூர அதை ரசிப்பதில்லை.
காரணம் உலக ஒழுங்கின் Main Actors களான அரசுகளின் எண்ணிக்கை அதிகமாக,அதிகமாக , இதற்கான புவிசார் அரசியல் நலனை அடிப்படையாக கொண்ட சதுரங்க ஆட்டமும் விளையாடுவதற்கு கடினமாக மாறும்.
ஆனால் இதையெல்லாம் தாண்டி , Great Powers தங்களது புவிசார் அரசியலை அடிப்படையாக வைத்து புதிய இறையாண்மை அரசு உருவாவதையோ, தடுப்பதையோ காலவோட்டத்தில் தொடர்ந்து செய்துகொண்டேதான் இருக்கின்றன.
• #வரலாற்றில் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்த காலமே பொற்காலம் என சிலர் கூறுகிறார்களே.
இதற்கான எனது பதில்.
வரலாற்றில் நாம் குறிப்பிடும் பொற்காலம் என்பது அன்றைய காலத்தின் அளவுகோலின்படி மதிப்பிடப்பட்டவை.
ஆனால் ஒட்டுமொத்த மனித குலத்தின் வரலாற்றையும் விரித்து வைத்து, உயரே பறக்கும் பறவையின் பார்வையில் (bird's-eye view) ஆய்வு செய்தீர்களேயானால் ‘ நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டம்தான்’ ஒப்பீட்டளவில் மனித வரலாற்றிலேயே மிக அமைதியான பொற்காலம்.
நாளைய உலகம் இன்றைய நம் பொற்காலத்தை விட மேம்பட்டதாக இருக்கும்.
"Violence has been in decline over long stretches of time", says Harvard professor Steven Pinker , "and we may be living in the most peaceful time in our species' existence
Comments
Post a Comment