தமிழ் இனப்படுகொலைக்கு நீதி கேட்டு ஜெனீவாவில் ஐப்பசி 12 தமிழர் மாநாடு - இனப்படுகொலைக்கு எதிரான கூட்டமைப்பு அறிவிப்பு.


ஈழத் தமிழர் இனப்படுகொலைக்கு நீதி கேட்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அழுத்தம் கொடுக்கும் வகை யில் அடுத்த மாதம் 12 ஆம் நாள் சுவிற்சர் லாந்து தலைநகர் ஜெனீவாவில் மாநாடு ஒன்றை நடத்தப் போவதாக இனப் படுகொ லைகளுக்கு எதிரான கூட்டமைப்பு அறி வித்துள்ளது .


 ஈழத் தமிழ் ஆதரவாளர்கள் வாழும் நாடுகள் அனைத்திலிருந்தும் இந்த மாநாட்டிற்காகப் பெரும் எண்ணிக்கையான மக்கள் திரள்வார்கள் என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார் . 


ஈழத்தில் இருந்தும் ஈழத்துக்கு ஆதரவான நாடுகளில் இருந்தும் அரசியல் தலைவர்கள் , மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் , இன உணர்வாளர்கள் என்ற வகையில் முதன் முறையாக மாநாடு நடத்தி பட்டயம் ஒன்றையும் வெளியிட இருக்கிறோம் என்றார் அனந்தி சசிதரன் . 


ஐப்பசி மாதம் 12 ஆம் நாள் மாலை 2 மணிக்கு ஜெனீ வாவில் உள்ள முருகதாசன் திடலில் இந்த மாநாடு நடத்தப்படவுள்ளதாக அறி விக்கப்பட்டுள்ளது . ஐக்கிய நாடுகள் மனித உரி மைகள் பேரவையின் 51 ஆவது அமர்வும் அதே தினத்தில் தொடங்கவுள்ள நிலையில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது . மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசு இணங்கிக்கொண்ட விடயங்களை அது இது வரையில் செயற்படுத்தாத நிலையில் கொழும்புக்கும் பேரவைக்கும் அழுத்தத் தைக் கொடுக்கும் நோக் கத்துடன் இந்த மாநாடு ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது . 

Ad

இந்த மாநாட்டில் இலங்கை யில் நடந்த இன அழிப் புக்கு நீதி கேட்கும் பட்ட யம் வெளியிடப்படும் என்று அனந்தி சசிதரன் கூறியிருக் கிறார் . இந்த மாநாட்டில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் அவர் அழைப்பு விடுத்திருக்கிறார் . மட்டக்களப்பு மாநகர சபை யின் முதல்வர் தி.சரவணப வனும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார் .


Join Our Viber Group


Join Our WhatsApp 

Comments

Popular posts from this blog

தொல்லியல் திணைக்களத்தை வழிநடத்தும் பௌத்த பிக்குகள்- சார்ள்ஸ் எம்.பி. சீற்றம்

இலங்கை – பங்களாதேஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை!

கட்சிதாவல் ஆரம்பம் ;13 எம்பிக்கள் எதிர்க்கட்சியில் அமர தீர்மானம்!