ஐந்து சிறுவர்கள் உள்ளிட்ட 8 பேர் தமிழகத்தில் தஞ்சம்.


இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் படகில் சென்ற ஐந்து சிறுவர்கள் உள்ளிட்ட 8 பேர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். 


தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த வயோதிபப் பெண் ஒருவர், தலைமன்னார் மேற்கைச் சேர்ந்த குடும்பஸ்தரும் அவருடைய மகன் மற்றும் மகள், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவரும் அவருடைய மகள் மற்றும் இரண்டு மகன்கள் என 8 படகு ஒன்றில் நேற்று தமிழகத்தில் தஞ்சமடையும் நோக்குடன் சென்றுள்ளனர். 


அவர்களைப் படகோட்டி தனுஷ்கோடிக்கு அருகில் உள்ள மணல் திட்டி இறக்கி விட்டுத் தப்பிச் சென்றுள்ளார். 


இன்று காலை அது தொடர்பில் தகவல் அறிந்த தமிழகக் கடலோரப் பாதுகாப்புப் பிரிவினர், அவர்களை மீட்டு கரைக்குக் கொண்டு வந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

நீங்கள் இன்று வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த கணம்தான், இந்த காலகட்டம்தான், மனித வரலாற்றிலேயே ‘மிக அமைதியான, வன்முறைகள் குறைந்த காலகட்டம்’.

அரசியல் தீர்வில் எதிரணி உறுதி - ராஜித எம்.பி. கருத்து

ஐம்பதாண்டுகளாக கடந்த போராட்டத்தின் பாதச்சுவடுகளை புத்தகமாக வெளியிடுகிறார் - சுமனசிரி லியனகே