இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆசியாவின் மிகப் பெரிய மாணிக்கக் கல்லுக்கு நடந்தது என்ன?

​‘ஆசியாவின் ராணி’ என்று பெயரிடப்பட்ட உலகின் மிகப்பெரிய இயற்கை மாணிக்கக் கல் இலங்கையின் ஹொரணை, தல்கஹவில பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.


இந்த கல்லின் எடை 310 கிலோ கிராம். உலகில் மிகப் பெரிய மாணிக்கக் கல்லானது இது Blue Sapphire ரகத்தை சேர்ந்தது என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இது தொடர்பான மதிப்பீடுகளின் பின்னர் மாணிக்கக் கல் ஏலத்திற்கு விடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் குறித்த மாணிக்கக்கல் 6 மாதங்களுக்கு முன் சுவிட்சர்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் இதுவரை விற்பனை செய்யப்படவில்லை என இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் திலக் வீரசிங்க தெரிவித்துள்ளார்.


இந்த மாணிக்கத்தின் பெறுமதி 2,000 கோடி ரூபாவுக்கும் அதிகம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், 310 கிலோ கிராம் எடையுள்ள இந்த மாணிக்கக்கல் வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்லும் போது பெற வேண்டிய 25% வைப்புத் தொகையின்றி எடுக்கப்பட்டுள்ளதாக அதிகார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதேவேளை, இரத்தினத்தை ஆய்வுக்கு எடுத்துச் செல்ல தேவையான ஆயிரம் ரூபா மட்டுமே அதிகாரியிடம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

தொல்லியல் திணைக்களத்தை வழிநடத்தும் பௌத்த பிக்குகள்- சார்ள்ஸ் எம்.பி. சீற்றம்

இலங்கை – பங்களாதேஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை!

கட்சிதாவல் ஆரம்பம் ;13 எம்பிக்கள் எதிர்க்கட்சியில் அமர தீர்மானம்!