நான்கு முட்டைகளுக்கு விலை ரூ.ஐந்து இலட்சமா?

​நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த பலாங்கொடை நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளருக்கு ஐந்து இலட்சம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.


இரத்தினபுரி நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போதே குறித்த கடைக்காரர் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமான விலையில் முட்டை விற்பனை செய்தமை கண்டுபிடிக்கப்பட்டது .
குறித்த கடை உரிமையாளர் பலாங்கொடை பதில் நீதவான் ஏ.எம்.எஸ். மெனிகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

குறித்த கடையிலிருந்து 4 முட்டைகள் கொள்வனவு செய்யப்பட்டதாகவும், கடைக்காரர் நான்கு முட்டைகளுக்கு தலா 65 ரூபா வீதம் 260 ரூபா அறவிட்டுள்ளதாகவும் நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரத்தினபுரி நுகர்வோர் அதிகார சபையின் மாவட்டத் தலைவர் உதய நமல்கமவின் பணிப்புரையின் பேரில் விசாரணை அதிகாரி ஹர்ஷனி தசநாயக்கவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தச் சுற்றிவளைப்பு சோதனையில் உத்தியோகத்தர்களான நாசிக் அஹமட் மற்றும் நதிஷா லியனகே ஆகியோர் பங்கெடுத்திருந்தனர்

Comments

Popular posts from this blog

தொல்லியல் திணைக்களத்தை வழிநடத்தும் பௌத்த பிக்குகள்- சார்ள்ஸ் எம்.பி. சீற்றம்

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை முன்வைத்துள்ள பரிந்துரைகள்....

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!