ரஞ்சன் ஏழு வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிடத் தடையா? - தேவைப்பட்டால் அனுமதி கிடைக்கும் என்கிறார் நீதி அமைச்சர்.


"ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க 7 வருடங்களுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாது. அவருக்குப் பூரண சுதந்திரம் வழங்கப்படவில்லை. எனினும், தேவைப்பட்டால் ரஞ்சன் ராமநாயக்கவை தேர்தலில் நிற்க அனுமதிக்க முடியும்."


- இவ்வாறு நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார்.


அவர் மேலும் கூறுகையில், 


"ரஞ்சன் தேர்தலில் போட்டியிடுவது தற்போது சாத்தியமில்லை. சட்டப்படி 7 ஆண்டுகளுக்கு அது சாத்தியமில்லை. எனினும், தேவைப்பட்டால் எதிர்காலத்தில் அதற்கான வாய்ப்பு வழங்கப்படலாம். இது போன்ற இரண்டு சந்தர்ப்பங்களில் பீல்ட் மார்ஷலுக்கும் வழங்கப்பட்டது. முதலில், தண்டனை இரத்துச் செய்யப்பட வேண்டும். அப்போது முழுச் சுதந்திரம் வழங்கப்படும். அது காலத்தைப் பொறுத்தே உள்ளது" - என்றார்.

Comments

Popular posts from this blog

நீங்கள் இன்று வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த கணம்தான், இந்த காலகட்டம்தான், மனித வரலாற்றிலேயே ‘மிக அமைதியான, வன்முறைகள் குறைந்த காலகட்டம்’.

அரசியல் தீர்வில் எதிரணி உறுதி - ராஜித எம்.பி. கருத்து

ஐம்பதாண்டுகளாக கடந்த போராட்டத்தின் பாதச்சுவடுகளை புத்தகமாக வெளியிடுகிறார் - சுமனசிரி லியனகே