தொடர்ந்தும் உயரும் அமெரிக்க டொலரின் பெறுமதி! மத்திய வங்கி அறிவிப்பு.....

 நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று அமெரிக்க டொலரின் பெறுமதியில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி 368.90 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 357.55 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

எவ்வாறாயினும், ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக ரூபாயின் மதிப்பில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

வேறு வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதி

  

தொடர்ந்தும் உயரும் அமெரிக்க டொலரின் பெறுமதி! மத்திய வங்கி அறிவிப்பு | Today Dollar Rates Dollar Lkr Rupee Cbsl Official

அதேநேரத்தில் பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு தளம்பல் நிலையில் உள்ளது.

அந்தவகையில், யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 371.69 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 356.26 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேவேளை, ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 432.04 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 415.01 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Comments

Popular posts from this blog

தொல்லியல் திணைக்களத்தை வழிநடத்தும் பௌத்த பிக்குகள்- சார்ள்ஸ் எம்.பி. சீற்றம்

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை முன்வைத்துள்ள பரிந்துரைகள்....

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!