யுத்தக் குற்றவாளிக்கு இலங்கையில் உயர் பீட விருது - கஜேந்திரன் விசனம்......
சர்வதேசத்தினால் யுத்தக்குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இலங்கையின் பௌத்த உயர் பீடம் விருது வழங்கி கௌரவிப்பது எந்த வகையில் நியாயமானது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.
யுத்தக் குற்றவாளிளை பாதுகாக்கும் அல்லது அவர்களுக்கு கௌரவம் வழங்கும் செயற்பாடுகளே தொடர்ந்தும் இலங்கையில் இடம்பெறுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எதிர்ப்பு போராட்டத்தின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மகாமான்ய பிரதாபாதிகேஷ்வர விருது
சிறிலங்கா பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு அஸ்கிரி மகா விகாரையின் அபினந்த விழாவில் வைத்து மகாமான்ய பிரதாபாதிகேஷ்வர விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட நிலையிலேயே செல்வராசா கஜேந்திரன் தனது விசனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
நாட்டுக்கும், பெளத்த மதத்துக்கும் தேசிய பாதுகாப்புக்கும் சவேந்திரசில்வா ஆற்றிய சேவைகளை கெளரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக அஸ்கிரி மகா விகாரை நிர்வாகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தது.
Comments
Post a Comment