விமான நிலையத்தில் பல கோடி ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்கள்.

 சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வர முட்பட்ட சுமார் 16 கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

6 கிலோ 995 கிராம் எடையுள்ள 60 தங்க பிஸ்கட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது. அதன் பெறுமதி 157 மில்லியன் ரூபா என  விமான நிலைய சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

தங்க பிஸ்ட்கள் பறிமுதல்

விமான நிலையத்தில் பல கோடி ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்கள் | Bandaranaike International Airport2022

தீர்வை வரியற்ற வர்த்தக நிலையத்தின் ஊழியர் ஒருவரும் இதன் போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர் ஜாஎல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தங்க பிஸ்கட்டுகள் 24 காரட் தங்கம் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது.

அதிகாரிகளால் பறிமுதல்

விமான நிலையத்தில் பல கோடி ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்கள் | Bandaranaike International Airport2022

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இலங்கை சுங்கப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து பாரிய அளவிலான பழைய உலோகங்களை ஏற்றுமதி செய்ய முயன்ற மூவரை இலங்கை சுங்கப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

தொல்லியல் திணைக்களத்தை வழிநடத்தும் பௌத்த பிக்குகள்- சார்ள்ஸ் எம்.பி. சீற்றம்

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை முன்வைத்துள்ள பரிந்துரைகள்....

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!