பதவி ஆசை பிடித்த சஜித்துக்கு நாடு பற்றி கவலையே இல்லை - அமைச்சர் அமரவீர பதிலடி .


"எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவே சர்வகட்சி அரசில் இணைவதற்குச் சஜித் பிரேமதாஸ எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றார்."


- இவ்வாறு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.


சர்வகட்சி அரசில் இணைந்து, அமைச்சுப் பதவிகளை ஏற்கப்போவதில்லை என்று சஜித் பிரேமதாஸ விடுத்துள்ள அறிவிப்புக்கு ஊடகங்களிடம் பதில் வழங்கும் வகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.


அவர் மேலும் தெரிவிக்கையில், 


"சர்வகட்சி அரசு அமைக்குமாறு பல தரப்பினரும் கோரிக்கை விடுக்கின்றனர். இது தொடர்பில் எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 


எனினும், எதிர்க்கட்சித் தலைவர், இந்த விவகாரத்திலும் அரசியலே நடத்துகின்றார். தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தக்க வைக்கவே, சர்வகட்சி அரசை எதிர்க்கின்றார். 


பதவி ஆசை பிடித்த சஜித்துக்கு நாடு பற்றி எந்தக் கவலை இல்லை" - என்றார்.

Comments

Popular posts from this blog

தொல்லியல் திணைக்களத்தை வழிநடத்தும் பௌத்த பிக்குகள்- சார்ள்ஸ் எம்.பி. சீற்றம்

இலங்கை – பங்களாதேஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை!

கட்சிதாவல் ஆரம்பம் ;13 எம்பிக்கள் எதிர்க்கட்சியில் அமர தீர்மானம்!