எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் யாழ்.பல்கலைக்கழகத்திற்கு உதவும் சீனத் தூதரகம்.....
சீனத் தூதரகத்தால் 42 மில்லியன் ரூபா பெறுமதியான உதவிப் பணம் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
இதற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களின் விவரம், சீனத் தூதரகத்துக்கு இன்று அனுப்பிவைக்கப்படவுள்ளது.
இந்த உதவித் தொகை வழங்கும் நிகழ்வில் சீனத் தூதுவர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் கண்டனம்....
இருப்பினும், சீனத் தூதுவர் இனப்படுகொலை தொடர்பில் தெரிவித்த கருத்துக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ள நிலையிலும், யாழ்.பல்கலைக்கழகத்தினுள் சீனச் சார்பு நடவடிக்கைகளை அவர்கள் வெளிப்படையாக எதிர்த்துள்ள நிலையிலும் இந்த உதவித் தொகை வழங்கப்படுமா என்பது சந்தேகமாகியுள்ளது.
சீனாவின் உதவி திட்டம்
சீனத் தூதரகம் நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு 2016ஆம் ஆண்டிலிருந்து வருடாந்தம் இந்த உதவித் தொகையை வழங்கி வருகின்றது.
இந்த ஆண்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாண பல்கலைக்கழக மாணவர்களுக்கே உதவித் தொகையை வழங்கச் சீனத் தூதரகம் தீர்மானித்துள்ளது. கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஏற்கனவே உதவித் தொகை வழங்கப்படுகின்றது.
இந்தநிலையில் யாழ்.பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 70 மாணவர்களுக்கு மாதாந்தம் தலா 5 ஆயிரம் ரூபா வீதம் ஒரு வருடத்துக்கு உதவித் தொகை வழங்குவதற்காகவே மாணவர்கள் விவரம் சீனத் தூதரகத்தால் கோரப்பட்டுள்ளது.
Comments
Post a Comment