காத்தாங்குடியைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி நிந்தவூர் வீதி விபத்தில் மரணம்...!!


நிந்தவூர் பிரதான வீதியில் துரைடமூலை என்னும் இடத்தில் காத்தாங்குடியைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது வாகனமொன்றுடன் மோதுண்டு இன்று காலை (31.08.2022) ஸ்தலத்திலேயே மரணமானார் என்று சொல்லப்படுகிறது. இன்னாலில்லாஹி வயின்னாஇலைஹி ராஜியூன்.


காத்தாங்குடி-5, மீராப்பள்ளி வீதியைச் சேர்ந்த 23வயதுடைய அக்பர் அலி பாத்திமா அஸ்பா என அழைக்கப்படுபவரே மரணமானவராவார்.


தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட விடுதி மாணவியான இவர் இரண்டாவது பருவகால அமர்வின்பொருட்டு தனது கணவருடன் காத்தாங்குடியிலிருந்து இன்று காலை 6.00மணியளவில் புறப்பட்டு நிந்தவூரினூடாக பல்கலைக்கழகத்திற்கு பயணித்துக்கொண்டிருந்தபோதே வாகனமொன்றுடன் மோதுண்டு காலமானார்.


இவரது ஜனாஸா தற்போது நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலை நிர்வாகம் பொலிசாருக்கு இதுதொடர்பாக அறிவித்ததைத் தொடர்ந்து பொலிசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.


இம்மாணவி திருமணமாகி மூன்று மாதங்களே ஆன நிலையில் இப்பரிதாப மரணம் சம்பவித்துள்ளமை கவலைக்குரியதாகும்.


இம்மாணவியின் தந்தையான அக்பர் அலி

கல்முனை மின்சார சபையில் நீண்டகாலமாக பணியாற்றியவர் என அறியப்படுகிறது.


பல்கலைக் கனவுகளுடனும், புதிதாக திருமணம் புரிந்து சந்தோசங்களைப் பகிர்ந்துகொள்ள முன்பாகவே அல்லாஹ் இவரை அழைத்துக்கொண்டான்.


அன்னாரின் மறுமையின் சிறப்புகளுக்காக வும், அவரது இழப்பால் தவித்துப்போயிருக்கும் அவரது குடும்பத்தவர்களின் மன ஆறுதலுக்காகவும் மனமுருகிப் பிரார்த்திப்போம்.


 #அதிகம்_பகிருங்கள்

Comments

Popular posts from this blog

தொல்லியல் திணைக்களத்தை வழிநடத்தும் பௌத்த பிக்குகள்- சார்ள்ஸ் எம்.பி. சீற்றம்

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை முன்வைத்துள்ள பரிந்துரைகள்....

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!