வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் தீர்வு தருவது ரணிலுக்கு சவாலாக அமையும்: சந்தியா எக்னலிகொட...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விசாரணை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்கு சர்வதேச ரீதியாக நம்பகமான பொறிமுறையை அறிமுகப்படுத்துவது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சவாலான விடயம் என காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட கருத்து தெரிவித்துள்ளார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் சபையும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் விசாரணை செய்யும் இலங்கைப் பொறிமுறையில் நம்பிக்கை இழந்து வருகின்றது.
ஆயுதப் போராட்டங்கள் அல்லது அரசியல் மோதல்களில் உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான மனிதர்கள் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் போயுள்ளனர்.
அவர்களின் சடலங்கள் இறுதிச் சடங்குகள் கூட செய்யாமல் புதைக்கப்பட்டன. அதேபோல் இலங்கையின் உள்நாட்டுப் போரில் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்ட போதிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்ததும் அந்த அலுவலகத்துக்கு தமக்கு நெருக்கமானவர்களை நியமித்ததால் அதன் நம்பகத்தன்மை இழக்கப்பட்டது. அத்துடன் இந்த அலுவலகத்தின் மீது சர்வதேச சமூகமும் நம்பிக்கையை இழந்துள்ளது.
ஜனாதிபதியிடம் கோரிக்கை
எனவே இந்த சவாலை ஏற்றுக்கொண்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பாதிக்கப்பட்ட குடும்பங்களை, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் உள்ளவர்களை விசாரித்து நீதியை நிறைவேற்ற நம்பகமான பொறிமுறையை நிறுவுமாறு ஜனாதிபதி விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காணாமலாக்கப்பட்ட கணவன் அல்லது மகனின் புகைப்படத்தை பெண்கள் எப்போதும் சுமந்து நீதி கோரி நிற்க முடியாது.
Comments
Post a Comment