ராஜபக்சக்களின் சகாவுக்கு எதிராக அவமதிப்பு வழக்கு.
ராஜபக்சக்களின் நெருங்கிய சகாவும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சனத் நிஷாந்தவுக்குத் தண்டனை வழங்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு தொடர்பிலே இந்த மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணி பிரியலால் சிறிசேனவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனுவில் பிரதிவாதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
Comments
Post a Comment