மட்டக்களப்பு மேயர் தியாகராஜா சரவணபவன் மக்களை போராட்டத்துக்கு அழைப்பு...

​மட்டக்களப்பு  நகரபிதா.(மேயர்)  தியாகராஜா சரவணபவன். அன்புத் தமிழ் உறவுகள் அனைவருக்கும் எனது வணக்கத்தினை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.


எதிர்வருகின்ற செப்டம்பர் மாதம் 12ம் திகதி 2மணி அளவிலே ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்பாக முருகதாசன் திடலிலே மாபெரும் மாநாடு நடைபெறவுள்ளது. 

எமது தமிழர் தாயகத்திலிருந்தும், அதே போல் ஏனைய புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழர் தேசங்களிலிருந்தும் தமிழ் உறவுகளும், தமிழ் செயற்பாட்டாளர்களும், இன உணர்வாளர்களும், ஏனைய தலைவர்களும் அந்த மாநாட்டிலே பங்குகொள்ள இருப்பதாக அறிகின்றேன். 

உங்களோடு நானும் கலந்துகொள்ளவுள்ளேன். அதேபோல் ஏனைய உணர்வு மிக்க உறவுகளும் இந்த மாநாட்டிலே பங்குகொள்ளும்படி மிகவும் அன்பாகவும், பணிவாகவும் வேண்டிக் கொள்கிறேன். 

தமிழ் மக்கள் இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்த பெரும்பான்மை இன ஆட்சியாளர்களால் தொடர்ச்சியாக ஓடுக்கப்பட்டும், உரிமைகள் மறுக்கப்பட்டும் வந்துள்ளனர். இதற்காக பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் இன்றுவரை அதற்கான தீர்வுகளோ, நிவரணங்களோ கிடைக்கபெறவில்லை.  

குறிப்பாக அரச பயங்கரவாதத்தினாலும், பயங்கரவாதத்தோடு இணைந்து செயற்படுகின்ற ஒட்டுக்குழுக்களினாலும் கிட்டத்தட்ட தமிழின அழிப்புச் சம்பவங்கள் பல நடந்தேறியுள்ளன. அதற்கான நீதி கிட்டாமையால் அப்படுகொலைக்கான நியாயத்தை தமிழ் மக்கள் தொடர்ந்தும்  வேண்டி நிற்கின்றார்கள்.

அதற்காகவே ஏற்கனவே ஐக்கிய நாடுகள் சபையினாலே நிறைவேற்றப்பட் 46ஃ1 தீர்மானத்தை நிறைவேற்றும்படியும், எங்களது தமிழின அழிப்புக்கான நீதியை வேண்டியும் ஒர் அழுத்ததினை வழங்குதவதற்காக இத்தகைய மாநாடு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல் பலவந்தமாக கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரை இன்று வரை அவர்களின் உறவுகள் தேடிக்கொன்டிருக்கின்றார்கள். அவர்களுக்குரிய நியாயம் கிட்டவில்லை, தமிழர் தாயகப் பகுதிகளில் அரச படைகளால் அபகரிக்கப்படுள்ள காணிகள் இன்னும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை, வடக்கு கிழக்கில் உள்ள புராதான சான்றிடங்களை திட்டமிட்டு பௌத்த மேலாதிக்க வாதிகள் அரசாங்கத்தின் துணையுடன் தமதுடமையாக்கி வருகின்றார்கள்.

தமிழர்களின் குடிப்பரம்பலினை திட்டமிட்டு சிதைப்பதற்கும், எல்லைகளை சுருக்குவதற்குமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

மேலும் பயங்கரவாத தடை சட்டத்தின் பலத்தினை கொண்டு தமிழ் இளைஞர்கள், செயற்பாட்டாளர்கள் ஊடகவியலாளர்கள் என பலர் சிறையில் அடைக்கப்பட்டு கொண்டிருக்கின்றார்கள். அரசியல் கைதிகள் இன்னும் முழுமையாக விடுவிக்கபடவில்லை. 

எனவே இத்தகைய தீர்க்கப்படாத பிரச்சனைகள் தொடர்பில் விரைவான தீர்வினை எட்டும் வகையில் மீண்டும் ஒருமுறை நாங்கள் சர்வதேசத்திற்கு எங்களது பலத்தை பறைசாற்றுவதன் மூலம் எமக்கான நியாயங்களை பெற்றுக் கொள்வதற்கும், சொந்த நாட்டில் சுயமாகவும். சுய கௌரவத்துடனும்  எம்மை நாமே ஆட்சி செய்வதற்கும், ஜனநாயக ரீதியாக உள்ள உரிமைகளையும், சுதந்திரங்களையும் அனுபவிக்க கூட்டிய வகையிலான ஓர் ஆரசியல் தீர்வினை பெற்றுக் கொள்ள இத்தகைய மாநாடு அமையும் என்ற நம்பிக்கையோடு நானும் கலந்து கொள்கிறேன் . நீங்களும் எம்மோடு இணைந்து மாநாட்டின் நோக்கத்திற்கு பலம் சேர்க்க வேண்டும் என்றும் அன்பாய் கேட்டுக் கொள்கின்றேன் என்று மட்டக்களப்பு  நகரபிதா(மேயர்)  தியாகராஜா சரவணபவன் வீடியோ காணொளி மூலம் கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

தொல்லியல் திணைக்களத்தை வழிநடத்தும் பௌத்த பிக்குகள்- சார்ள்ஸ் எம்.பி. சீற்றம்

இலங்கை – பங்களாதேஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை!

கட்சிதாவல் ஆரம்பம் ;13 எம்பிக்கள் எதிர்க்கட்சியில் அமர தீர்மானம்!