பயங்கரவாதத் தடைச் சட்டம் உடன் ஒழிக்கப்பட வேண்டும் - மைத்திரி வலியுறுத்து

​பயங்கரவாதத் தடைச் சட்டம் 

உடன் ஒழிக்கப்பட வேண்டும் 


- மைத்திரி வலியுறுத்து 


போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது.


போராட்டத்தில் ஈடுபட்டனர் என்று சந்தேகிக்கப்படும் நபர்களைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்வது நல்ல விடயமல்ல என்று முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.


நாட்டின் தற்போதைய நிலைமையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் அவசியமற்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.


எனவே, பயங்கரவாதத் தடைச் சட்டம் உடனடியாக இல்லாதொழிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.


பயங்கரவாதத் தடைச் சட்டத்தை கொள்கை ரீதியாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதில் தாம் உடன்படுகின்றார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

தொல்லியல் திணைக்களத்தை வழிநடத்தும் பௌத்த பிக்குகள்- சார்ள்ஸ் எம்.பி. சீற்றம்

இலங்கை – பங்களாதேஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை!

கட்சிதாவல் ஆரம்பம் ;13 எம்பிக்கள் எதிர்க்கட்சியில் அமர தீர்மானம்!