நெருக்கடி நேரத்தில் பிரேரணை எதற்கு? - இப்படிக் கேட்கின்றார் விமல் .


"இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள வேண்டுமானால் சர்வதேச நாடுகள் உதவிகளைச் செய்யவேண்டும். இவ்வாறான நெருக்கடி நேரத்தில் இலங்கைக்கு எதிராக ஏன் மற்றுமொரு பிரேரணையை முன்வைக்கவேண்டும்?"


- இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் சுயாதீன அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச.


அவர் மேலும் தெரிவிக்கையில், 


"பிரேரணைகள் மூலம் இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என்பதைச் சர்வதேச நாடுகள் கவனத்தில்கொள்ள வேண்டும். பிரேரணைகள் இன உறவுக்கு மேலும் குந்தகத்தையே ஏற்படுத்தும். 


பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழ வேண்டுமெனில் சர்வதேச நாடுகளின் உதவிகளே வேண்டும். இந்நிலையில், இலங்கைக்குப் எதிராகப் புதிய பிரேரணை எதற்கு? 


ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட எந்தப் பிரேரணையும் செயலுருப்பெற்றதாக வரலாறு இல்லை" - என்றார்.

Comments

Popular posts from this blog

தொல்லியல் திணைக்களத்தை வழிநடத்தும் பௌத்த பிக்குகள்- சார்ள்ஸ் எம்.பி. சீற்றம்

இலங்கை – பங்களாதேஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை!

கட்சிதாவல் ஆரம்பம் ;13 எம்பிக்கள் எதிர்க்கட்சியில் அமர தீர்மானம்!