செல்வச்சந்நிதியானுக்கு இன்று கொடியேற்றம் இனிதே ஆரம்பம்.
வள்ளிக்கொடி தானாக முளைத்தெழும்பும் அற்புத நிகழ்வுகளுடன் கொடியேற்றம் தொடங்கும்.
கொடியேற்றத்துடன் இன்று மாலை 2.30 மணிக்கு பக்திபூர்வமாக ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து 15 தினங்கள் உற்சவங்கள் இடம்பெறும்.
தொண்டைமானாற்றங்கரையில் வேலவனாக வீற்றிருந்து அருளாட்சி செய்யும் சிறப்பினை நோக்கினால் செல்வங்கள் பலவற்றை தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு வழங்கி அவர்களின் பிறவிப் பிணியை அறுக்கும் பிரசாதத்தை நாள்தோறும் கொடுத்த வண்ணம் இருப்பதை காணலாம்.
மருதர் கதிர்காமர் அறுபத்தி ஐந்து ஆலம் இலைகளில் அமுது படைத்த ஐதீகம் செல்வச்சந்நிதிக்கு உண்டு.
இக்கோவிலைச் சுற்றி ஏறக்குறைய 45 மடங்கள் இருந்தன.இவற்றில் பல நாட்டில் ஏற்பட்ட வன்செயலால் அழிந்தும் சேதமுற்றும் உள்ளன.
தன்னை நாடி வரும் அடியார்களுக்கு எந்நேரமும் பாராது உணவு வழங்குவதால் அன்னதானக்கந்தன் என்ற பெயர் ஏற்பட்டது. சந்நிதி மண்ணிலே கால் பட்டதும் ஒருவித தெய்வீக உணர்வு ஏற்படும்.மெய் சிலிர்ப்படையும். இது வரலாற்று உண்மை.
#தமிழ்க்கடவுள் முருகன் எளிமையை விரும்பி வந்து அமர்ந்த திருத்தலம் #செல்வச்சந்நிதி
Comments
Post a Comment