காஞ்சன இருக்கிறது என்று சொன்னாலும் செட்களில் எரிபொருள் இல்லை! இன்றும் நீண்ட வரிசைகள்!

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கொழும்பு உட்பட பல பகுதிகளில் இன்று (29) மக்கள் நீண்ட வரிசையில் நின்று எரிபொருளை பெற்றுக்கொள்வதைக் காணமுடிகிறது .

எரிபொருள் கையிருப்பு இல்லாத காரணத்தினால் இன்றும் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டிருப்பதை காணக்கூடியதாக உள்ளதுடன், பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல் இல்லை என்ற அறிவிப்பை காணமுடிகிறது. எரிபொருள் தட்டுப்பாடு இல்லை .போதிய எரிபொருள் கைவசம் உள்ளது என எரிபொருள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டரில் அறிவித்தாலும் நடைமுறையில் எரிபொருள் கிடைப்பதில்லை.

எரிபொருள் இருப்புக்களை ஓடர் செய்த போதிலும் உரிய கையிருப்பு கிடைப்பதில்லை என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Comments

Popular posts from this blog

யுத்தக் குற்றவாளிக்கு இலங்கையில் உயர் பீட விருது - கஜேந்திரன் விசனம்......

ஜனாதிபதி தலைமையில் நாளை விஷேட கூட்டம்.

ரஞ்சன் ஏழு வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிடத் தடையா? - தேவைப்பட்டால் அனுமதி கிடைக்கும் என்கிறார் நீதி அமைச்சர்.