நீண்ட காலத்திற்குப் பின்னர் திறக்கப்படவுள்ள தாமரை கோபுரம்! வெளிநாட்டவர்களுக்கு டொலர்களில் கட்டணம்...

 ஆசியாவிலே மிக உயரமான கட்டடம் என அழைக்கப்படும் கொழும்பில் உள்ள தாமரை கோபுரம் திறக்கப்படவுள்ளதாக அதிபர் செயலகம் அறிவித்துள்ளது.

மேலும், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் தாமரை கோபுரம் வணிக நடவடிக்கைக்காக திறக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

இலங்கை மக்களுக்காக சாதாரண கட்டணம் 500 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்கான வரம்பற்ற கட்டணம் 2000 ரூபாயாகும்.

வெளிநாட்டவர்களுக்கான கட்டணம் 

நீண்ட காலத்திற்குப் பின்னர் திறக்கப்படவுள்ள தாமரை கோபுரம்! வெளிநாட்டவர்களுக்கு டொலர்களில் கட்டணம் | When Lotus Tower Open Date2022 Lanka Tourism Rate

அதேவேளை, வெளிநாட்டவர்களுக்கான கட்டணம் 20 அமெரிக்க டொலர்கள் எனவும் அதிபர் செயலகம் தெரிவித்துள்ளது. சீனா அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் இந்த கோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

அதன் நிர்மாணப் பணிகள் முடிவடைந்து நீண்ட காலம் சென்றுள்ள நிலையில், அதனை திறக்கும் நடவடிக்கை தாமதமாகி உள்ள நிலையில் எதிர்வரும் 15ஆம் திகதி திறக்கப்படவுள்ளது.

Comments

Popular posts from this blog

தொல்லியல் திணைக்களத்தை வழிநடத்தும் பௌத்த பிக்குகள்- சார்ள்ஸ் எம்.பி. சீற்றம்

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை முன்வைத்துள்ள பரிந்துரைகள்....

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!