இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக எடுக்கப்பட்ட தோல்வியின் விளைவாக, இலங்கைக்கு கிட்டத்தட்ட 600,000 மெற்றிக் தொன் தரமற்ற மற்றும் நச்சு அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.


இலங்கையில் தடை செய்யப்பட்ட மோனோகுரோடோபோஸ் மற்றும் கிளைபோசேட் போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் நெல் பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தப்படும் நாடுகளில் இருந்து இலங்கை கிட்டத்தட்ட 600,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்துள்ளதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

“இலங்கையில் பயிரிடப்படும் அரிசியை விட இந்த இறக்குமதி அரிசி மிகவும் தீங்கு விளைவிக்கக்கூடியது. இலங்கையில் மொனோகுரோட்டோபோஸ், க்ளைபோசேட் போன்ற இரசாயனங்கள் நெல் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுவதில்லை. எனினும், சில தரப்பினரின் நடைமுறைச் சாத்தியமற்ற ஆலோசனையின் அடிப்படையில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க விரும்பினோம். நெல் அறுவடையின் பற்றாக்குறையை சமாளிக்க தரமற்ற மற்றும் தீங்கு விளைவிக்கும் அரிசியை பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது ,” என்றார்.

Comments

Popular posts from this blog

தொல்லியல் திணைக்களத்தை வழிநடத்தும் பௌத்த பிக்குகள்- சார்ள்ஸ் எம்.பி. சீற்றம்

இலங்கை – பங்களாதேஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை!

கட்சிதாவல் ஆரம்பம் ;13 எம்பிக்கள் எதிர்க்கட்சியில் அமர தீர்மானம்!