இன்று முதல் வழமைக்கு திரும்பும் தனியார் போக்குவரத்து.....
இன்று முதல் தனியார் பஸ் வண்டிகள் வழமை போன்று போக்குவரத்தில் ஈடுபடும் என்று தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் கெமுனு விஜயரட்ன தெரிவித்தார்.
தனியார் பஸ் வண்டிகளுக்கு தற்சமயம் எரிபொருள் போதியளவு கிடைக்கின்றது. எனவே எதிர்காலத்தில் எதுவித தடையும் இன்றி தனியார் பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடும் என அவர் குறிப்பிட்டார்.
வழமைக்கு திரும்பும் போக்குவரத்து
முறையாக எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பில் விசேட பேச்சுவார்த்தை ஒன்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கும் தனியார் பஸ் உரிமையாளர் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் விரைவில் இடம்பெறவுள்ளது.
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தனியார் பஸ் போக்குவரத்து சேவைகள் 50 வீதமாக மட்டுப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment