வெளிவிவகார அமைச்சர், எகிப்து தூதுவர் சந்திப்பு.

 

இலங்கைக்கான எகிப்து தூதுவர் மகேத் மொஸ்லே, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை வெளிவிவகார அமைச்சில் நேற்று சந்தித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் சப்ரி மற்றும் தூதர் மோஸ்லே ஆகியோர் பன்முக இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பான விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.

தற்போதைய முன்னேற்றங்கள், நாடு எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் இந்த சவால்களை சமாளிக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து தூதுவர் மொஸ்லேவிடம் அமைச்சர் சப்ரி விளக்கினார்.

தற்போதைய உலக முன்னேற்றங்கள் மற்றும் இரு நாடுகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் இதன் போது லந்துரையாடப்பட்டது.

இலங்கைக்கும் எகிப்துக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்ததன் 65 ஆவது ஆண்டு நிறைவு விழா அடுத்த வருடம் சிறப்பாக கொண்டாடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

நீங்கள் இன்று வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த கணம்தான், இந்த காலகட்டம்தான், மனித வரலாற்றிலேயே ‘மிக அமைதியான, வன்முறைகள் குறைந்த காலகட்டம்’.

அரசியல் தீர்வில் எதிரணி உறுதி - ராஜித எம்.பி. கருத்து

ஐம்பதாண்டுகளாக கடந்த போராட்டத்தின் பாதச்சுவடுகளை புத்தகமாக வெளியிடுகிறார் - சுமனசிரி லியனகே