யாழில் வீட்டை உடைத்து தங்க நகைகளை திருடிய இருவர் கைது....

 யாழ்.சுழிபுரம் பகுதியில் உள்ள வீடொன்றை பட்டப்பகலில் உடைத்து தங்க நகைகளை  திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுழிபுரம் பகுதியில் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் நேற்றுமுன்தினம் கடமைக்கு சென்று திரும்பிய போது அவரது வீடு உடைக்கப்பட்டு 8 தங்கப் பவுண் நகை திருடப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழில் வீட்டை உடைத்து தங்க நகைகளை திருடிய இருவர் கைது | Jaffna Police Investigation Robbery

பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு 

குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த தலைமை பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் காரைநகரைச் சேர்ந்த இருவரை இன்று கைது செய்துள்ளனர்.

இதன்போது குறித்த சந்தேக நபர்களிடமிருந்து ஏழரைப் பவுண் தங்கப் நகை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதனையடுத்து சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

நீங்கள் இன்று வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த கணம்தான், இந்த காலகட்டம்தான், மனித வரலாற்றிலேயே ‘மிக அமைதியான, வன்முறைகள் குறைந்த காலகட்டம்’.

அரசியல் தீர்வில் எதிரணி உறுதி - ராஜித எம்.பி. கருத்து

ஐம்பதாண்டுகளாக கடந்த போராட்டத்தின் பாதச்சுவடுகளை புத்தகமாக வெளியிடுகிறார் - சுமனசிரி லியனகே