இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளைய தினம் (29) 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
சர்வதேசத்தினால் யுத்தக்குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இலங்கையின் பௌத்த உயர் பீடம் விருது வழங்கி கௌரவிப்பது எந்த வகையில் நியாயமானது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது. யுத்தக் குற்றவாளிளை பாதுகாக்கும் அல்லது அவர்களுக்கு கௌரவம் வழங்கும் செயற்பாடுகளே தொடர்ந்தும் இலங்கையில் இடம்பெறுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எதிர்ப்பு போராட்டத்தின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மகாமான்ய பிரதாபாதிகேஷ்வர விருது சிறிலங்கா பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு அஸ்கிரி மகா விகாரையின் அபினந்த விழாவில் வைத்து மகாமான்ய பிரதாபாதிகேஷ்வர விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட நிலையிலேயே செல்வராசா கஜேந்திரன் தனது விசனத்தை வெளிப்படுத்தியுள்ளார். நாட்டுக்கும், பெளத்த மதத்துக்கும் தேசிய பாதுகாப்புக்கும் சவேந்திரசில்வா ஆற்றிய சேவைகளை கெளரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக அஸ்கிரி மகா விகாரை நிர்வாகம் தெரிவித்தி...
ஆளும் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம் நாளை (29) நடைபெற உள்ளது. இந்த சந்திப்பு நாளை மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சர்வட்சி அரசாங்கம் மற்றும் அமைச்சு பதவிகளை பகிர்ந்துகொள்ள குறித்து இதன்போது தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாகவும் அறிவிய முடிகிறது.
"ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க 7 வருடங்களுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாது. அவருக்குப் பூரண சுதந்திரம் வழங்கப்படவில்லை. எனினும், தேவைப்பட்டால் ரஞ்சன் ராமநாயக்கவை தேர்தலில் நிற்க அனுமதிக்க முடியும்." - இவ்வாறு நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "ரஞ்சன் தேர்தலில் போட்டியிடுவது தற்போது சாத்தியமில்லை. சட்டப்படி 7 ஆண்டுகளுக்கு அது சாத்தியமில்லை. எனினும், தேவைப்பட்டால் எதிர்காலத்தில் அதற்கான வாய்ப்பு வழங்கப்படலாம். இது போன்ற இரண்டு சந்தர்ப்பங்களில் பீல்ட் மார்ஷலுக்கும் வழங்கப்பட்டது. முதலில், தண்டனை இரத்துச் செய்யப்பட வேண்டும். அப்போது முழுச் சுதந்திரம் வழங்கப்படும். அது காலத்தைப் பொறுத்தே உள்ளது" - என்றார்.
Comments
Post a Comment