புத்தளம் வைத்தியசாலை வரலாற்றில் முதல் தடவையாக ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள்!
24 வயதுடைய இளம் தாய் ஒருவரே இந்தக் குழந்தைகளைப் பெற்றெடுத்ததாக புத்தளம் வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் சுமித் அன்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
அவர்களில் ஒரு ஆண் மற்றும் மூன்று பெண்கள் உள்ளனர். தற்போது, குறித்த நான்கு குழந்தைகளும் புத்தளம் அடிப்படை வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் சம்பின் ஜயவர்தனவின் மேற்பார்வையில் பாதுகாப்பாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Comments
Post a Comment