பாரிய வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை..! தங்க நிலவரம்......

 

தங்க நிலவரம்

மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி அடைந்துள்ளது. சமீபத்தைய தங்க நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ரூ. 615,269.00 ஆகும்.

புவி அரசியல் பிரச்சினை காரணமாக தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக திறனாய்வாளர்கள் கூறினாலும், அதையும் கடந்து வேறு சில காரணங்களையும் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

அது குறித்து தெரிந்து கொள்வது தங்கத்தில் முதலீடு செய்வது குறித்து துல்லியமாக முடிவெடுக்க உதவும்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தங்கம் மீதான லாப வளர்ச்சி விகிதம் 9.4 சதமாக உயர்ந்துள்ளது.

2015-ஆம் ஆண்டுக்கு பிறகு, 2021-இல் 3.6 சதமாக இருந்த வளர்ச்சி விகிதம், தற்போது முன்னேற்றம் கண்டு வருகிறது.

புவி அரசியல் பிரச்சினை காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக திறனாய்வாளர்கள் கூறினாலும், அதையும் கடந்து வேறு சில காரணங்களும் தங்கத்தின் விலையில் தாக்கம் செலுத்தி வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

இன்றைய தங்க நிலவரம் (07.09.2022)

24 கரட் 
1 கிராம்
ரூபாய் 21,710.00
24 கரட்
8 கிராம் (1பவுன் )
ரூபாய் 173,650.00
22 கரட் 
1 கிராம் 
ரூபாய் 19,910.00
22 கரட் 
8 கிராம் (1 பவுன்)
ரூபாய் 159,250.00
21 கரட்
1 கிராம்
ரூபாய் 19,000.00
21 கரட்
8 கிராம் (1 பவுன்)
ரூபாய் 152,000.00

தங்கத்தின் தூய்மை

பாரிய வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை..! தங்க நிலவரம் | Gold Price In Sri Lanka Gold Price In World Market

சந்தையில் நாம் காணும் அல்லது கொள்முதல் செய்யும் தங்கத்தில் செம்பு, நிக்கல், வெள்ளி, பல்லேடியம் மற்றும் துத்தநாகம் போன்ற வேறு சில உலோகங்கள் கலக்கப்படுகிறது.

வெள்ளி மற்றும் தாமிரம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் குறைந்தபட்சம் அல்லது மலிவான தங்கம், இளஞ்சிவப்புத் தங்கம் அல்லது வெள்ளி அல்லது செம்பு கலந்த தங்கம் என அழைக்கப்படுகிறது, சில நேரங்களில் பச்சை தங்கம் என அழைக்கப்படுகிறது,

வெள்ளைத் தங்கம் என்பது தங்கம் மற்றும் பல்லேடியம், நிக்கல் கலந்தது.

வெள்ளி தாமிரம் மற்றும் துத்தநாகத்துடன் கலந்த மஞ்சள் கலந்த தங்கம் விலை மிகுதியானது..

24 கரட்
99.9%
23 கரட்
95.6%
22 கரட்
91.6%
21 கரட்
87.5%
18 கரட் 
75.0%
17 கரட்
70.8%
14 கரட்
58.5%
10 கரட் 
41.7%
9 கரட்
37.5%
8 கரட்
33.3%

கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான அம்சம் என்னவென்றால் காரட்கள் குறைவாக இருக்கும் தங்கம் வலு மிக்கது.

குறைந்து வரும் தங்கத்திற்கான உலகளாவிய தேவை

தங்கத்திற்கான உலகளாவிய தேவை விரைவாகக் குறைந்து வருகிறது.

தொழிற்துறை மற்றும் நகைகளுக்கான பாரம்பரிய தேவை தொடர்ந்து சரிந்து வருவதைக் காண முடிகிறது.

உதாரணமாக, உலகத் தங்க மன்றத்தால் வழங்கப்பட்ட புள்ளி விவரங்களின் படி நகைகளுக்கான தங்கத்தின் தேவை 2014 ஆம் ஆண்டு இருந்த 2,479 தொன்களோடு ஒப்பிடுகையில் 2015 ஆம் ஆண்டு வெறும் 2,390 தொன்னாக இருந்தது.

எனவே, கடந்த வருடத்தோடு ஒப்பிடும் போது வருடத்திற்கு வருடம் தேவை சரிந்து வருகிறது.

உண்மையில் மின்னணுவியல் போன்ற துறைகளிலும் தங்கத்தின் தேவை குறைந்து வருகிறது.

கட்டித் தங்கத்திற்கான தேவை 2015 மற்றும் 2016 ஆண்டுகளில் 761 தொன்களாகச் சமநிலையில் இருக்கிறது.

மற்றொரு புறம் அதிகாரபூர்வ தங்க நாணயங்களுக்கான தேவை 2014 ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டு வரை 205 தொன்னிலிருந்து 220 தொன்னாக உயர்ந்துள்ளது.

விலைகள் ஒருவேளை சரிந்தால், வரவிருக்கும் வருடங்களில் இந்த விலையுயர்ந்த உலோகத்திற்கான தேவை அதிகரிக்கும் சாத்தியங்கள் இருக்கிறது.

2016 இல் தங்கத்தின் விலைகள் அதிகரித்த போது தங்கத்தின் சந்தை சரிந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

நேற்றைய தங்க நிலவரம்(06.09.2022)

பாரிய வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை..! தங்க நிலவரம் | Gold Price In Sri Lanka Gold Price In World Market

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தங்க விலையானது 2018ம் ஆண்டுக்கு பிறகு மாதாந்த அளவில் ஓகஸ்ட் மாதத்தில் சுமார் 3% சரிவினைக் கண்டுள்ளது.

இது தொடர்ந்து 5 வது மாதமாக சரிவினைக் கண்டு வருகின்றது. இதன் காரணமாக இன்னும் குறைவடையலாமோ என்ற எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.

டொலரின் மதிப்பானது தொடர்ந்து தங்க விலைக்கு ஆதரவாக இருந்து வந்தாலும், மறுபுறம் பணவீக்கம், உலகளாவிய அளவில் நிலவி வரும் அரசியல் பதற்றங்கள், பொருளாதார மந்தம் என பலவும் கவனிக்க வேண்டியவையாக உள்ளன.

இதன் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ரூ. 622,034.00 ஆகும்.

24 கரட் 
1 கிராம்
ரூபாய் 21,950.00
24 கரட்
8 கிராம்  (1பவுன் )
ரூபாய் 175,550.00
22 கரட் 
1 கிராம் 
ரூபாய் 20,130.00
22 கரட் 
8 கிராம் (1 பவுன்)
ரூபாய் 161,000.00
21 கரட்
1 கிராம்
ரூபாய் 19,210.00
21 கரட்
8 கிராம் (1 பவுன்)
ரூபாய் 153,65

Comments

Popular posts from this blog

தொல்லியல் திணைக்களத்தை வழிநடத்தும் பௌத்த பிக்குகள்- சார்ள்ஸ் எம்.பி. சீற்றம்

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை முன்வைத்துள்ள பரிந்துரைகள்....

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!