இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை முன்வைத்துள்ள பரிந்துரைகள்....

 இலங்கையில் மீண்டும் மனித உரிமை மீறல்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு, பொறுப்புக்கூறல் மற்றும் அரச நிறுவனங்களில் ஆழமான சீர்திருத்தங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்கு இலங்கையின் புதிய அரசாங்கமும் ஒரு தேசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கைக்கு இலங்கை உத்தியோகபூர்வமாக பதிலளித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் மனித உரிமைகள் அமர்வு செப்டம்பர் 12 முதல் அக்டோபர் 7 வரை நடைபெற உள்ளது.

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை முன்வைத்துள்ள பரிந்துரைகள் | Un Human Rights Council Recommendations By Sl

மனித உரிமைகள் கடுமையாகப் பாதிப்பு

இந்நிலையில், மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகமும் இலங்கை தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை பேணுவதற்கான தேசிய பேச்சுவார்த்தைக்கு புதிய அரசாங்கம் அவசரமாக வர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசியல் ரீதியாகவும், நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாகவும் அனைத்து தரப்பு மக்களினதும் மனித உரிமைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடர்புடைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர், கடுமையான பாதுகாப்புச் சட்டங்கள் மற்றும் அமைதியான போராட்டங்களை நசுக்குவதை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

இராணுவமயமாக்கல், பாதுகாப்புத் துறையில் சீர்திருத்தம் மற்றும் தண்டனையின்மையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான போக்கை மாற்றியமைக்க ஒரு புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை முன்வைத்துள்ள பரிந்துரைகள் | Un Human Rights Council Recommendations By Sl

மாணவர் செயற்பாட்டாளர்கள் கைது

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் மாணவர் செயற்பாட்டாளர்களை கைது செய்து, பொதுமக்களின் போராட்டங்களை நசுக்கும் கடுமையான கொள்கையை அரசாங்கம் கடைப்பிடித்து வருகிறது.

கடந்த பருவத்தில் இலங்கையில் நடைபெற்ற பொதுப் போராட்டத்தின் போது போராட்டக்காரர்களைக் கலைக்க காவல்துறை அதிக பலத்தைப் பயன்படுத்தியதையும் இது காட்டிநிற்கின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில், பொது மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை சீர்திருத்துவது முக்கியமானது என உயர்ஸ்தானிகர் அறிக்கையில் பரிந்துரைத்துள்ளார்.

Comments

Popular posts from this blog

தொல்லியல் திணைக்களத்தை வழிநடத்தும் பௌத்த பிக்குகள்- சார்ள்ஸ் எம்.பி. சீற்றம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!