கோட்டாவுடன் மஹிந்த இரு மணிநேரம் பேச்சு.
நாடு திரும்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை அவரின் சகோதரரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச நேரில் சந்தித்தார்.
கோட்டாபயவின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு நேற்றுச் சென்று அவரைச் சந்தித்த மஹிந்த, அவருடன் இரு மணிநேரம் உரையாடினார்.
இதையடுத்து, பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 50 இற்கும் மேற்பட்டோர் கோட்டாபய ராஜபக்சவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
மக்கள் புரட்சி காரணமாக இலங்கையிலிருந்து வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்றுமுன்தினம் நள்ளிரவு மீண்டும் நாடு திரும்பினார்.
தாய்லாந்திலிருந்து சிங்கப்பூர் வழியாக பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அவர் நாட்டை வந்தடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment