மீண்டும் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகிய உயிர்.......
மித்தெனிய முலன்யாய பிரதேசத்தில் நேற்று (வியாழக்கிழமை) இரவு வீதியில் பயணித்த 47 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்தோடு அதே பகுதியைச் சேர்ந்த இவர் உறவினர் வீட்டில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக மித்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பலத்த காயமடைந்த குறித்த நபர் தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை கடந்த மே மாதம் 31ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் வெளிநாட்டில் இருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment