Posts

மீண்டும் குறைக்கப்படும் எரிவாயு விலை..! வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு...

Image
  எரிவாயு விலை குறைப்பு தொடர்பில்  லாஃப் எரிவாயு   நிறுவனம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனினும் லாஃப் எரிவாயு நிறுவனம் உள்நாட்டு எரிவாயு கொள்கலன்களின் விலையை மேலும் குறைக்க உள்ளதாக கடந்த 21ஆம் திகதி அறிவித்திருந்தது. இதற்கமைய, லாஃப் எரிவாயுவின் விலை இந்த மாதம் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய விலைகள் அத்துடன் 12.5 கிலோகிராம் எடை கொண்ட லாஃப் எரிவாயு கொள்கலன்களின் தற்போதைய விலை 5,800 ரூபாவாகவும், 5 கிலோகிராம் எடை கொண்ட கொள்கலன்களின் விலை 2,320 ரூபாவாகவும், 2.5 கிலோகிராம் எடையுள்ள எரிவாயு கொள்கலன்களின் விலை 928 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த சூழ்நிலையிலேயே லாஃப் எரிவாயு நிறுவனம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  லிட்ரோ எரிவாயு இதேவேளை லிட்ரோ எரிவாயு வின் விலை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் குறைக்கப்பட்டிருந்தது. விலை சூத்திரத்திற்கமைய இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. இவற்றின் அடிப்படையில் 12.5 கில...

பாரிய வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை..! தங்க நிலவரம்......

Image
  தங்க நிலவரம் மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி அடைந்துள்ளது. சமீபத்தைய தங்க நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ரூ. 615,269.00 ஆகும். புவி அரசியல் பிரச்சினை காரணமாக தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக திறனாய்வாளர்கள் கூறினாலும், அதையும் கடந்து வேறு சில காரணங்களையும் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அது குறித்து தெரிந்து கொள்வது தங்கத்தில் முதலீடு செய்வது குறித்து துல்லியமாக முடிவெடுக்க உதவும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தங்கம் மீதான லாப வளர்ச்சி விகிதம் 9.4 சதமாக உயர்ந்துள்ளது. 2015-ஆம் ஆண்டுக்கு பிறகு, 2021-இல் 3.6 சதமாக இருந்த வளர்ச்சி விகிதம், தற்போது முன்னேற்றம் கண்டு வருகிறது. புவி அரசியல் பிரச்சினை காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக திறனாய்வாளர்கள் கூறினாலும், அதையும் கடந்து வேறு சில காரணங்களும் தங்கத்தின் விலையில் தாக்கம் செலுத்தி வருவதாக குறிப்பிடப்படுகின்றது. இன்றைய   தங்க நிலவரம் (07.09.2022) 24 கரட்  1 கிராம் ரூபாய் 21,710.00 24 கரட் 8 கிராம் (1பவுன் ) ரூபாய் 173,650.00 22 கரட்  1 கிராம்  ரூபாய்...

பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

Image
2022ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைக்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பமாகும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 4ஆம் திகதி நடைபெறவுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், டிசம்பர் 5 ஆம் திகதி ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சைகள் 2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரம் வரை நடைபெறும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனிவா பறந்தது இலங்கை அரச குழு

Image
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவினர் இன்று ஜெனிவாவுக்குப் பயணமாகியுள்ளனர். இந்தக் குழுவில் வெளிவிவகார அமைச்சருடன் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ச, சட்டமா அதிபர் திணைக்களத்தினர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் 51 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

சட்டக் கல்லூரிக்கான விண்ணப்பம் கோரல்

Image
  இலங்கை சட்டக் கல்லூரிக்குப் பிரவேசிப்பதற்கான பொது நுழைவுப் பரீட்சைக்குத் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் கோரப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள், அடுத்த மாதம் (ஒக்டோபர்) 16 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று இலங்கை சட்டக் கல்லூரி தெரிவித்துள்ளது. இதன்படி, விண்ணப்பபடிவம் மற்றும் வழிமுறைகள் இலங்கை சட்டக் கல்லூரியின் இணையத்தளத்தளத்தில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வகட்சி அரசு தொடர்பில் சஜித்துடன் ஐ.தே.க. பேச்சு

Image
அனைத்துக் கட்சி அரசை அமைப்பது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் ஐக்கிய தேசியக் கட்சி பேச்சு நடத்துகின்றது என்று அக்கட்சியின் பிரதித் தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான ருவன் விஜேவர்தன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "ஐக்கிய மக்கள் சக்தி மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் அணி சேர்வதற்கான கதவுகள் திறந்தே உள்ளன. நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், துன்பங்களிலிருந்து மக்களை விடுவிக்கவும் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைவது அவசியம்" - என்றார்.

ஹல்துமுல்ல - உடவேரிய தோட்டத்தில் நீர்வீழ்ச்சியில் விழுந்து இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.

Image
  ஹல்துமுல்ல உடவேரிய தோட்டத்தின் சன்வெலி தோட்டப் பகுதியில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சியை பார்வையிட கடந்த வெள்ளிக்கிழமை (02) இளைஞர்கள் இருவர் சென்றுள்ளனர். நீர்வீழ்ச்சிக்கு அருகில்  செல்ஃபி புகைப்படம்  எடுக்கச் சென்ற போது இளைஞன் ஒருவர் தவறி நீர்வீழ்ச்சியில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இளைஞனின் சடலம் கண்டெடுப்பு ஹல்துமுல்ல பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து சுமார் 200 மீற்றர் கீழே உள்ள குழி ஒன்றில் இருந்து இளைஞனின் சடலம் நேற்று (03) கண்டெடுக்கப்பட்டது. வெலமிட்டியாவ குருதலாவ பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் ஹல்துமுல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்