Posts

தொல்லியல் திணைக்களத்தை வழிநடத்தும் பௌத்த பிக்குகள்- சார்ள்ஸ் எம்.பி. சீற்றம்

Image
​தொல்லியல் திணைக்களத்தை வழிநடத்தும் பௌத்த பிக்குகள் - சார்ள்ஸ் எம்.பி. சீற்றம் "வனஇலாகா, வனஜீவராசிகள், மகாவலி, தொல்பொருள் ஆகிய நான்கு திணைக்களங்களும் அமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை. தொல்பொருள் திணைக்களத்தை ஒரு சில பௌத்த பிக்குகள்தான் வழிநடத்துகின்றனர்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். வவுனியாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், "மகாவலி அபிவிருத்தி அதிகார சபை 1970 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அது முழுமையாகத் தமிழர்களது இன விகிதாசாரத்தை இல்லாதொழிப்பதற்காக உருவாக்கப்பட்டது. அதனை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். 1988 ஆம் ஆண்டு மகாவலி எல் வலயம் வர்த்தமானி பிரசுரம் செய்யப்பட்டு இன்று 34 வருடங்கள் முடிவடைந்திருக்கின்றன. அதில் வவுனியா, முல்லைத்தீவு உள்ளடங்களாக பல பிரதேசங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன. அதற்கமைய வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களை அபிவிருத்தி என்ற போர்வையில் தென்பகுதி மக்களுக்கு வழங்கும் செயற

நாளைய மின்வெட்டு அட்டவணை

Image
  இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளைய தினம் (29) 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இந்தியாவின் தயவில் ஐ.நாவின் பொறியிலிருந்து மீட்சிபெறும் முயற்சியில் சிறிலங்கா!

Image
விடுதலைப் புலிகள் மற்றும் புலம்பெயர் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் சிறிலங்காவிற்கு எதிராக செயற்படுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார். மேலும் அந்த அமைப்புகளை எவ்வளவு விடுவித்தாலும், அவர்கள் ஈழத்தை வென்றெடுக்க போராடுவதாகவே தெரிகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வு கடந்த திங்கட்கிழமை 12 ஆம் திகதி ஆரம்பமான நிலையில் சிறிலங்கா தொடர்பான கருத்துக்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான நிலையிலேயே  மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இத தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,  “ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவிற்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள தீர்மானங்களை வெற்றிபெறச் செய்வதற்கு இந்தியாவின் ஆதரவை இலங்கை பெற வேண்டும். சிறிலங்கா தோற்கடிக்கப்படலாம் இந்த பிரேரணைக்கு 47 நாடுகள் வாக்களிக்கவுள்ளதாகவும், 23 அல்லது 24 நாடுகளின் ஆதரவைப் பெற முடியாத பட்சத்தில் அந்த பிரேரணைகளினால் சிறிலங்கா தோற்கடிக்கப்ப

நினைவேந்தல்கள் தொடர்பில் ரணிலின் நிலைப்பாடு! பகிரங்கமாக அறிவித்த பிரதமர்..

Image
போர்க்காலத்தில் இறந்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்களின் உறவினர்கள் அல்லது அவர்கள் சார்ந்த இனத்தவர்கள் அவர்களை அமைதியாக நினைவேந்த முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் ஒவ்வொரு வருடமும் நினைவேந்தல் நிகழ்வுகள் வரும்போது இன ரீதியான, மொழி ரீதியான, மத ரீதியான கருத்து மோதல்கள் வெடிக்கின்றன. ரணில் உறுதியாகவுள்ளார் அந்த நிலைமை இனியும் தொடரக்கூடாது என்பதில் அதிபர் ரணில் விக்ரமசிங்க உறுதியாகவுள்ளார். நினைவேந்தல்களை இறந்தவர்களின் உறவினர்கள் அல்லது அவர்கள் சார்ந்த இனத்தவர்கள் அமைதியாகக் கடைப்பிடிக்க வேண்டும். அந்த நிகழ்வுகள் அரசியல் நிகழ்ச்சி நிரல் உள்ளதாகவோ அல்லது இன ரீதியான கிளர்ச்சியைத் தூண்டுபவையாகவோ இருக்கக்கூடாது. இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகிறது இற்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,   

ஐம்பதாண்டுகளாக கடந்த போராட்டத்தின் பாதச்சுவடுகளை புத்தகமாக வெளியிடுகிறார் - சுமனசிரி லியனகே

Image
​ஐம்பதாண்டுகள் கடந்த போராட்டத்தின் பாதச்சுவடுகள் වම සහ ජීවිතය சிறியின் நேரடி காட்சிகள்  நூல் வெளியீடு   நட்புறவுடனான கலந்துரையாடல் கலாநிதி சுமனசிறி லியனகே விரிவுரையாளர் சாயிநாதன் விமல் விதர்சன கன்னங்கர புபதி நலீன்  திகதி- 2022 - 09 -13 ( செவ்வாய்க்கிழமை ) நேரம்-மாலை 3.30 மணி முதல்  இடம்- கொழும்பு 07 தேசிய நூலக  ஆவணாக்கல் சபை கேட்போர் அரங்கில் தொடர்புகளுக்கு : 071407955 - 0777443684

தந்தையின் வான் சில்லில் சிக்குண்டு 2 வயது குழந்தை பலி...

Image
  திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாயன்மார் திடல் பகுதியில் தந்தை செலுத்திய வானுடன் மோதி இரண்டு வயது   சிறுமி   உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, திருகோணமலை - தம்பலகாமம் பகுதியை சேர்ந்த ரஜீந்தன் நட்சத்திரா (02 வயது) என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. பொலிஸார் தீவிர விசாரணை தந்தை வானை பின்னால் எடுத்த போது சிறுமி தவறி விழுந்து வானுக்குள் சிக்குண்டதாக ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்த சிறுமியின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை முன்வைத்துள்ள பரிந்துரைகள்....

Image
 இலங்கையில்  மீண்டும் மனித உரிமை மீறல்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு, பொறுப்புக்கூறல் மற்றும் அரச நிறுவனங்களில் ஆழமான சீர்திருத்தங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்கு இலங்கையின் புதிய அரசாங்கமும் ஒரு தேசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கைக்கு இலங்கை உத்தியோகபூர்வமாக பதிலளித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் மனித உரிமைகள் அமர்வு செப்டம்பர் 12 முதல் அக்டோபர் 7 வரை நடைபெற உள்ளது. மனித உரிமைகள் கடுமையாகப் பாதிப்பு இந்நிலையில், மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகமும் இலங்கை தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை பேணுவதற்கான தேசிய பேச்சுவார்த்தைக்கு புதிய அரசாங்கம் அவசரமாக வர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை அரசியல் ரீதியாகவும், நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி கார