தந்தையின் வான் சில்லில் சிக்குண்டு 2 வயது குழந்தை பலி...

 திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாயன்மார் திடல் பகுதியில் தந்தை செலுத்திய வானுடன் மோதி இரண்டு வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

திருகோணமலை - தம்பலகாமம் பகுதியை சேர்ந்த ரஜீந்தன் நட்சத்திரா (02 வயது) என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

தந்தையின் வான் சில்லில் சிக்குண்டு 2 வயது குழந்தை பலி | Trincomale2 Year Old Baby Died

பொலிஸார் தீவிர விசாரணை

தந்தை வானை பின்னால் எடுத்த போது சிறுமி தவறி விழுந்து வானுக்குள் சிக்குண்டதாக ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

தந்தையின் வான் சில்லில் சிக்குண்டு 2 வயது குழந்தை பலி | Trincomale2 Year Old Baby Died

இவ்வாறு உயிரிழந்த சிறுமியின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

தொல்லியல் திணைக்களத்தை வழிநடத்தும் பௌத்த பிக்குகள்- சார்ள்ஸ் எம்.பி. சீற்றம்

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை முன்வைத்துள்ள பரிந்துரைகள்....

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!