யாழில் பெருந்தொகையான கஞ்சாவுடன் சிக்கிய ஹயஸ்- இரண்டு பேர் கைது.


யாழ்ப்பாணம், பலாலி - அன்ரனிபுரம் பகுதியில் பெருந்தொகையான கஞ்சாவுடன் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


பலாலி - அன்ரனிபுரம் பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் பெருந்தொகையான கஞ்சாவுடன் ஹயஸ் வாகனம் ஒன்று கடற்படையினரால் மீட்கப்பட்டு அச்சுவேலிப் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டது.


இந்தச் சம்பவம் தொடர்பாக ஹயஸ் வாகனத்தில் இருந்த மானிப்பாய் மற்றும் மன்னார் பகுதியைச் சேர்ந்த இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் ஹயஸ் வாகனமும் தடுத்துவைக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

நீங்கள் இன்று வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த கணம்தான், இந்த காலகட்டம்தான், மனித வரலாற்றிலேயே ‘மிக அமைதியான, வன்முறைகள் குறைந்த காலகட்டம்’.

அரசியல் தீர்வில் எதிரணி உறுதி - ராஜித எம்.பி. கருத்து

ஐம்பதாண்டுகளாக கடந்த போராட்டத்தின் பாதச்சுவடுகளை புத்தகமாக வெளியிடுகிறார் - சுமனசிரி லியனகே