பாதாள உலகக் குழுவினருக்கு கூண்டோடு சமாதி கட்டுங்கள்! பொலிஸாருக்கு அரசு விசேட அறிவிப்பு


இலங்கையில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் வர்த்தகத்தையும் பாதாள உலகக் குழுவினரையும் முற்றாகக் கட்டுப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸாருக்கு விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.


மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னக்கோன், தென் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் ஆகியோருடன் நடத்திய கலந்துரையாடலின் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 


போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் கோஷ்டியைக் கட்டுப்படுத்துவதற்கு முழுமையான அதிகாரத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Comments

Popular posts from this blog

யுத்தக் குற்றவாளிக்கு இலங்கையில் உயர் பீட விருது - கஜேந்திரன் விசனம்......

ஜனாதிபதி தலைமையில் நாளை விஷேட கூட்டம்.

ரஞ்சன் ஏழு வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிடத் தடையா? - தேவைப்பட்டால் அனுமதி கிடைக்கும் என்கிறார் நீதி அமைச்சர்.