யாழில் முள்ளு குத்தி குடும்பஸ்தர் மரணம்.....

யாழில் முட்கிளுவை கதிகால் முள்ளுக் குத்தியதால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ். அனலைதீவு 7ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த குமாரசாமி தம்பிராசா (வயது – 70) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

திடீர் இறப்பு விசாரணை

கடந்த 31ஆம் திகதி அவருக்கு முள்ளு குத்தியுள்ளது. காலில் கொதி வலியாக இருப்பதாக அனலைதீவு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றுள்ளார்.அங்கிருந்து ஊர்காவற்றுறை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

யாழில் முள்ளு குத்தி குடும்பஸ்தர் மரணம் | Jaffna Death Police Investigation

மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

இறப்பு விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார். பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் இன்று உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

 

Comments

Popular posts from this blog

தொல்லியல் திணைக்களத்தை வழிநடத்தும் பௌத்த பிக்குகள்- சார்ள்ஸ் எம்.பி. சீற்றம்

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை முன்வைத்துள்ள பரிந்துரைகள்....

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!