Posts

Showing posts from September, 2022

நாளைய மின்வெட்டு அட்டவணை

Image
  இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளைய தினம் (29) 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இந்தியாவின் தயவில் ஐ.நாவின் பொறியிலிருந்து மீட்சிபெறும் முயற்சியில் சிறிலங்கா!

Image
விடுதலைப் புலிகள் மற்றும் புலம்பெயர் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் சிறிலங்காவிற்கு எதிராக செயற்படுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார். மேலும் அந்த அமைப்புகளை எவ்வளவு விடுவித்தாலும், அவர்கள் ஈழத்தை வென்றெடுக்க போராடுவதாகவே தெரிகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வு கடந்த திங்கட்கிழமை 12 ஆம் திகதி ஆரம்பமான நிலையில் சிறிலங்கா தொடர்பான கருத்துக்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான நிலையிலேயே  மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இத தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,  “ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவிற்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள தீர்மானங்களை வெற்றிபெறச் செய்வதற்கு இந்தியாவின் ஆதரவை இலங்கை பெற வேண்டும். சிறிலங்கா தோற்கடிக்கப்படலாம் இந்த பிரேரணைக்கு 47 நாடுகள் வாக்களிக்கவுள்ளதாகவும், 23 அல்லது 24 நாடுகளின் ஆதரவைப் பெற முடியாத பட்சத்தில் அந்த பிரேரணைகளினால் சிறிலங்கா தோற்கடிக்கப்ப

நினைவேந்தல்கள் தொடர்பில் ரணிலின் நிலைப்பாடு! பகிரங்கமாக அறிவித்த பிரதமர்..

Image
போர்க்காலத்தில் இறந்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்களின் உறவினர்கள் அல்லது அவர்கள் சார்ந்த இனத்தவர்கள் அவர்களை அமைதியாக நினைவேந்த முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் ஒவ்வொரு வருடமும் நினைவேந்தல் நிகழ்வுகள் வரும்போது இன ரீதியான, மொழி ரீதியான, மத ரீதியான கருத்து மோதல்கள் வெடிக்கின்றன. ரணில் உறுதியாகவுள்ளார் அந்த நிலைமை இனியும் தொடரக்கூடாது என்பதில் அதிபர் ரணில் விக்ரமசிங்க உறுதியாகவுள்ளார். நினைவேந்தல்களை இறந்தவர்களின் உறவினர்கள் அல்லது அவர்கள் சார்ந்த இனத்தவர்கள் அமைதியாகக் கடைப்பிடிக்க வேண்டும். அந்த நிகழ்வுகள் அரசியல் நிகழ்ச்சி நிரல் உள்ளதாகவோ அல்லது இன ரீதியான கிளர்ச்சியைத் தூண்டுபவையாகவோ இருக்கக்கூடாது. இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகிறது இற்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,   

ஐம்பதாண்டுகளாக கடந்த போராட்டத்தின் பாதச்சுவடுகளை புத்தகமாக வெளியிடுகிறார் - சுமனசிரி லியனகே

Image
​ஐம்பதாண்டுகள் கடந்த போராட்டத்தின் பாதச்சுவடுகள் වම සහ ජීවිතය சிறியின் நேரடி காட்சிகள்  நூல் வெளியீடு   நட்புறவுடனான கலந்துரையாடல் கலாநிதி சுமனசிறி லியனகே விரிவுரையாளர் சாயிநாதன் விமல் விதர்சன கன்னங்கர புபதி நலீன்  திகதி- 2022 - 09 -13 ( செவ்வாய்க்கிழமை ) நேரம்-மாலை 3.30 மணி முதல்  இடம்- கொழும்பு 07 தேசிய நூலக  ஆவணாக்கல் சபை கேட்போர் அரங்கில் தொடர்புகளுக்கு : 071407955 - 0777443684

தந்தையின் வான் சில்லில் சிக்குண்டு 2 வயது குழந்தை பலி...

Image
  திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாயன்மார் திடல் பகுதியில் தந்தை செலுத்திய வானுடன் மோதி இரண்டு வயது   சிறுமி   உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, திருகோணமலை - தம்பலகாமம் பகுதியை சேர்ந்த ரஜீந்தன் நட்சத்திரா (02 வயது) என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. பொலிஸார் தீவிர விசாரணை தந்தை வானை பின்னால் எடுத்த போது சிறுமி தவறி விழுந்து வானுக்குள் சிக்குண்டதாக ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்த சிறுமியின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை முன்வைத்துள்ள பரிந்துரைகள்....

Image
 இலங்கையில்  மீண்டும் மனித உரிமை மீறல்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு, பொறுப்புக்கூறல் மற்றும் அரச நிறுவனங்களில் ஆழமான சீர்திருத்தங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்கு இலங்கையின் புதிய அரசாங்கமும் ஒரு தேசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கைக்கு இலங்கை உத்தியோகபூர்வமாக பதிலளித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் மனித உரிமைகள் அமர்வு செப்டம்பர் 12 முதல் அக்டோபர் 7 வரை நடைபெற உள்ளது. மனித உரிமைகள் கடுமையாகப் பாதிப்பு இந்நிலையில், மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகமும் இலங்கை தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை பேணுவதற்கான தேசிய பேச்சுவார்த்தைக்கு புதிய அரசாங்கம் அவசரமாக வர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை அரசியல் ரீதியாகவும், நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி கார

மீண்டும் குறைக்கப்படும் எரிவாயு விலை..! வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு...

Image
  எரிவாயு விலை குறைப்பு தொடர்பில்  லாஃப் எரிவாயு   நிறுவனம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனினும் லாஃப் எரிவாயு நிறுவனம் உள்நாட்டு எரிவாயு கொள்கலன்களின் விலையை மேலும் குறைக்க உள்ளதாக கடந்த 21ஆம் திகதி அறிவித்திருந்தது. இதற்கமைய, லாஃப் எரிவாயுவின் விலை இந்த மாதம் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய விலைகள் அத்துடன் 12.5 கிலோகிராம் எடை கொண்ட லாஃப் எரிவாயு கொள்கலன்களின் தற்போதைய விலை 5,800 ரூபாவாகவும், 5 கிலோகிராம் எடை கொண்ட கொள்கலன்களின் விலை 2,320 ரூபாவாகவும், 2.5 கிலோகிராம் எடையுள்ள எரிவாயு கொள்கலன்களின் விலை 928 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த சூழ்நிலையிலேயே லாஃப் எரிவாயு நிறுவனம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  லிட்ரோ எரிவாயு இதேவேளை லிட்ரோ எரிவாயு வின் விலை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் குறைக்கப்பட்டிருந்தது. விலை சூத்திரத்திற்கமைய இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. இவற்றின் அடிப்படையில் 12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு கொள்கலனின்

பாரிய வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை..! தங்க நிலவரம்......

Image
  தங்க நிலவரம் மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி அடைந்துள்ளது. சமீபத்தைய தங்க நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ரூ. 615,269.00 ஆகும். புவி அரசியல் பிரச்சினை காரணமாக தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக திறனாய்வாளர்கள் கூறினாலும், அதையும் கடந்து வேறு சில காரணங்களையும் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அது குறித்து தெரிந்து கொள்வது தங்கத்தில் முதலீடு செய்வது குறித்து துல்லியமாக முடிவெடுக்க உதவும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தங்கம் மீதான லாப வளர்ச்சி விகிதம் 9.4 சதமாக உயர்ந்துள்ளது. 2015-ஆம் ஆண்டுக்கு பிறகு, 2021-இல் 3.6 சதமாக இருந்த வளர்ச்சி விகிதம், தற்போது முன்னேற்றம் கண்டு வருகிறது. புவி அரசியல் பிரச்சினை காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக திறனாய்வாளர்கள் கூறினாலும், அதையும் கடந்து வேறு சில காரணங்களும் தங்கத்தின் விலையில் தாக்கம் செலுத்தி வருவதாக குறிப்பிடப்படுகின்றது. இன்றைய   தங்க நிலவரம் (07.09.2022) 24 கரட்  1 கிராம் ரூபாய் 21,710.00 24 கரட் 8 கிராம் (1பவுன் ) ரூபாய் 173,650.00 22 கரட்  1 கிராம்  ரூபாய் 19,910.00 22 கரட்  8 கிராம் (1 பவுன்) ரூபாய் 159,25

பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

Image
2022ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைக்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பமாகும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 4ஆம் திகதி நடைபெறவுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், டிசம்பர் 5 ஆம் திகதி ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சைகள் 2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரம் வரை நடைபெறும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனிவா பறந்தது இலங்கை அரச குழு

Image
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவினர் இன்று ஜெனிவாவுக்குப் பயணமாகியுள்ளனர். இந்தக் குழுவில் வெளிவிவகார அமைச்சருடன் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ச, சட்டமா அதிபர் திணைக்களத்தினர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் 51 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

சட்டக் கல்லூரிக்கான விண்ணப்பம் கோரல்

Image
  இலங்கை சட்டக் கல்லூரிக்குப் பிரவேசிப்பதற்கான பொது நுழைவுப் பரீட்சைக்குத் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் கோரப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள், அடுத்த மாதம் (ஒக்டோபர்) 16 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று இலங்கை சட்டக் கல்லூரி தெரிவித்துள்ளது. இதன்படி, விண்ணப்பபடிவம் மற்றும் வழிமுறைகள் இலங்கை சட்டக் கல்லூரியின் இணையத்தளத்தளத்தில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வகட்சி அரசு தொடர்பில் சஜித்துடன் ஐ.தே.க. பேச்சு

Image
அனைத்துக் கட்சி அரசை அமைப்பது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் ஐக்கிய தேசியக் கட்சி பேச்சு நடத்துகின்றது என்று அக்கட்சியின் பிரதித் தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான ருவன் விஜேவர்தன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "ஐக்கிய மக்கள் சக்தி மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் அணி சேர்வதற்கான கதவுகள் திறந்தே உள்ளன. நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், துன்பங்களிலிருந்து மக்களை விடுவிக்கவும் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைவது அவசியம்" - என்றார்.

ஹல்துமுல்ல - உடவேரிய தோட்டத்தில் நீர்வீழ்ச்சியில் விழுந்து இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.

Image
  ஹல்துமுல்ல உடவேரிய தோட்டத்தின் சன்வெலி தோட்டப் பகுதியில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சியை பார்வையிட கடந்த வெள்ளிக்கிழமை (02) இளைஞர்கள் இருவர் சென்றுள்ளனர். நீர்வீழ்ச்சிக்கு அருகில்  செல்ஃபி புகைப்படம்  எடுக்கச் சென்ற போது இளைஞன் ஒருவர் தவறி நீர்வீழ்ச்சியில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இளைஞனின் சடலம் கண்டெடுப்பு ஹல்துமுல்ல பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து சுமார் 200 மீற்றர் கீழே உள்ள குழி ஒன்றில் இருந்து இளைஞனின் சடலம் நேற்று (03) கண்டெடுக்கப்பட்டது. வெலமிட்டியாவ குருதலாவ பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் ஹல்துமுல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இலங்கைக்கு கிடைக்கும் தொடர் உதவிகள்....

Image
  உலக உணவுத் திட்டம், இந்த வாரம் வறுமை அதிகமாக இருக்கும் நுவரெலியா மற்றும் கொழும்பில் உள்ள 15,000 இலங்கையர்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பாம் ஒயில் ஆகியவற்றை வழங்க ஆரம்பித்துள்ளது. இந்த உதவியானது, 6.3 மில்லியன் இலங்கையர்கள் பட்டினியில் இருக்கும் வேளையில், உலக உணவு திட்டத்துக்கு, ஜப்பான் வழங்கிய 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ( 540 மில்லியன் ரூபாய் ) நன்கொடை மூலம் சாத்தியமாகியுள்ளது. தேசிய பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 380,000 மாணவர்களுக்கு உதவவும் இந்த நிதி வழங்கப்படவுள்ளது. இந்தநிலையில் பாதிக்கப்படும் குடும்பங்கள் மற்றும் குழந்தைகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்படும்  என்று இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகொஷி ஹிடேகி  கூறியுள்ளார். குறைந்த பட்சம் 6.3 மில்லியன் அல்லது 10 இலங்கையர்களில் ஒவ்வொரு மூன்று பேர், இப்போது போதுமான உணவு இல்லாமல் வாழ்கின்றனர். உணவுப் பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் 90% உயர்ந்துள்ளது. ஒரு கிலோ சிவப்பு உளுத்தம் பருப்பு, ஒரு முக்கிய உணவு, இப்போது 580 ரூபாய்,  ஒரு கிலோ தோரா என்ற காணாங்கெளுத்தி வகை மீன் (தோரா) 5,600 ரூபாவுக்கு

யாழில் முள்ளு குத்தி குடும்பஸ்தர் மரணம்.....

Image
யாழில் முட்கிளுவை கதிகால் முள்ளுக் குத்தியதால் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ். அனலைதீவு 7ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த குமாரசாமி தம்பிராசா (வயது – 70) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். திடீர் இறப்பு விசாரணை கடந்த 31ஆம் திகதி அவருக்கு முள்ளு குத்தியுள்ளது. காலில் கொதி வலியாக இருப்பதாக அனலைதீவு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றுள்ளார்.அங்கிருந்து ஊர்காவற்றுறை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார். இறப்பு விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார். பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் இன்று உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.  

எரிபொருள் நெருக்கடியால் பெரும்போக பயிர்ச் செய்கை மேற்கொள்ள முடியாத நிலை: விவசாயிகள் விசனம்...

Image
  பெரும்போக பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் பெறுப்போக பயிர்ச்செய்கைக்கான நிலத்தினை பயன்படுத்துவதற்கான எரிபொருள் கிடைக்கப்பெறாமல் விவசாயிகள் பெரும்போக பயிர்ச் செய்கை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை என விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.  கிளிநொச்சி மாவட்டத்தில் பல பகுதிகளில் சிறுபோக பயிர்ச்செய்கைகள் முடியும் நிலையில் பொரும்போக பயிர்ச்செய்கக்காக நிலத்தினை பயன்படுத்துவதற்கான எரிபொருள் கிடைக்கப் பெறாத காரணத்தினால் பல விவசாயிகள் தமது பெரும்போக பயிர்ச் செய்கையில் மேற்கொள்வதில் பெரும் சிரமத்தை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர். எரிபொருள் தட்டுப்பாடு  இதன் காரணமாக சிலர் தமது சொந்த மாடுகளை பயன்படுத்தி நிலத்தினை விவசாயச் செய்கைக்கு பண்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது சிலரே தமது கால்நடைகளை பயன்படுத்தி நிலத்தை பண்படுத்தி வருகின்றனர். இயந்திர வாழ்கையை நம்பி ஏமாற்றம் அடைந்ததே மிகுதி எனவும் முன்னையகாலம் போன்று அனைவரும் வீட்டுக்கு ஒரு சோடி மாட்டை வளர்த்தால் மட்டுமே விவசாயம் மேற்கொள்ள முடியும் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். உணவு பற்றாக்குறை  தற்பொழுது நாட்டின் நிலைமைய