Posts

Showing posts from August, 2022

இந்தியா எடுத்த திடீர் முடிவு! இலங்கைக்கு காத்திருக்கும் நெருக்கடி.

Image
  ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக கோதுமை மா இறக்குமதியை இந்தியா நிறுத்தியுள்ளதால் இலங்கைக்கு பெரும் நெருக்கடி நிலை ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோதுமை மா ஏற்றுமதிக்கு இந்தியா விதித்த தடையால் இலங்கைக்கான மா இறக்குமதியும் நிறுத்தப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் வர்த்தக அமைச்சிற்கு தெரிவித்துள்ளனர். இலங்கைக்கு சிக்கல் இந்தியாவில் இருந்தே கோதுமாவை இலங்கை இறக்குமதி செய்து வந்துள்ளது. எனினும் விரைவில்  இந்தியாவில்  இருந்து கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பு முழுமையாக குறைவடையும் என்றும் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இலங்கைக்கு கடுமையான சிக்கல் நிலை ஏற்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். இதேவேளை, தற்போது துருக்கியில் இருந்து மாத்திரமே கோதுமை மாவை இறக்குமதி செய்ய நிலை உருவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தட்டுப்பாடு இதனால் கோதுமை மாவிற்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதென சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன

பதிலடி கொடுக்க தயார்..! முற்றுகையிட்டுள்ள போர்க்கப்பல்கள்: சீனா அமெரிக்கா இடையே வலுக்கும் போர் பதற்றம்

Image
போர் பதற்றம் சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தாய்வான் சென்றதையடுத்து சீனா அமெரிக்கா இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தாய்வானை சுற்றி அமெரிக்க, சீன போர்க்கப்பல்கள் முற்றுகையிட்டுள்ளதால் தென் சீன கடல் பகுதியில் போர் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி ஒரு நாள் பயணமாக கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்க விமானப்படை விமானத்தில் தனது நாட்டு குழுவினருடன் தாய்வான் சென்றிருந்தார். தாய்வானுக்கு தனிநாடு என்ற அங்கீகாரத்தை வழங்கும் அமெரிக்கா  இது குறித்து நான்சி பெலோசி கூறும்போது தாய்வானுடன் கொண்டுள்ள நட்புறவை பெருமையாகக் கருதுகிறோம். தாய்வானுக்கு அளித்த உறுதியை கைவிட மாட்டோம் என்பதை தெளிவுபடுத்துவதற்காக எங்கள் குழுவுக்கு வந்துள்ளது என்றார், இடுரு நாகளுக்கு இடையேயான உறவு மற்றும் ஒத்துழைப்பு மேலும் வலுவடையும் என தாய்வான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. அமெரிக்க அதிபருக்கு அடுத்த நிலையில் உயர் பதவியிலுள்ள அந்நாட்டு சபாநாயகர் தாய்வான் வந்தது கடந்த 25 ஆண்டுகளில் இதுவே முதல் தடவைய

பாடசாலைகளுக்கான தவணை விடுமுறை குறித்து வெளியானஅறிவிப்பு !

Image
  அரச மற்றும் அரச அனுமதிபெற்ற தனியார் பாடசாலைகளுக்கான தவணை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதற்கமைய, பாடசாலைகளுக்கு எதிர்வரும் செப்டெம்பர் 8 முதல் 12 வரை தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளது. புதிய தவணைக்காக பாடசாலைகள் மீண்டும் செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி மீள திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நான்கு முட்டைகளுக்கு விலை ரூ.ஐந்து இலட்சமா?

Image
​நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த பலாங்கொடை நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளருக்கு ஐந்து இலட்சம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போதே குறித்த கடைக்காரர் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமான விலையில் முட்டை விற்பனை செய்தமை கண்டுபிடிக்கப்பட்டது . குறித்த கடை உரிமையாளர் பலாங்கொடை பதில் நீதவான் ஏ.எம்.எஸ். மெனிகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறித்த கடையிலிருந்து 4 முட்டைகள் கொள்வனவு செய்யப்பட்டதாகவும், கடைக்காரர் நான்கு முட்டைகளுக்கு தலா 65 ரூபா வீதம் 260 ரூபா அறவிட்டுள்ளதாகவும் நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் தெரிவித்தனர். இரத்தினபுரி நுகர்வோர் அதிகார சபையின் மாவட்டத் தலைவர் உதய நமல்கமவின் பணிப்புரையின் பேரில் விசாரணை அதிகாரி ஹர்ஷனி தசநாயக்கவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தச் சுற்றிவளைப்பு சோதனையில் உத்தியோகத்தர்களான நாசிக் அஹமட் மற்றும் நதிஷா லியனகே ஆகியோர் பங்கெடுத்திருந்தனர்

காத்தாங்குடியைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி நிந்தவூர் வீதி விபத்தில் மரணம்...!!

Image
நிந்தவூர் பிரதான வீதியில் துரைடமூலை என்னும் இடத்தில் காத்தாங்குடியைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது வாகனமொன்றுடன் மோதுண்டு இன்று காலை (31.08.2022) ஸ்தலத்திலேயே மரணமானார் என்று சொல்லப்படுகிறது. இன்னாலில்லாஹி வயின்னாஇலைஹி ராஜியூன். காத்தாங்குடி-5, மீராப்பள்ளி வீதியைச் சேர்ந்த 23வயதுடைய அக்பர் அலி பாத்திமா அஸ்பா என அழைக்கப்படுபவரே மரணமானவராவார். தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட விடுதி மாணவியான இவர் இரண்டாவது பருவகால அமர்வின்பொருட்டு தனது கணவருடன் காத்தாங்குடியிலிருந்து இன்று காலை 6.00மணியளவில் புறப்பட்டு நிந்தவூரினூடாக பல்கலைக்கழகத்திற்கு பயணித்துக்கொண்டிருந்தபோதே வாகனமொன்றுடன் மோதுண்டு காலமானார். இவரது ஜனாஸா தற்போது நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலை நிர்வாகம் பொலிசாருக்கு இதுதொடர்பாக அறிவித்ததைத் தொடர்ந்து பொலிசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். இம்மாணவி திருமணமாகி மூன்று மாதங்களே ஆன நிலையில் இப்பரிதாப மரணம் சம்பவித்துள்ளமை கவலைக்குரியதாகும். இம்மாணவியின் தந்தையான அக்பர் அலி கல்முனை மின்சார சபையில்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!

Image
இலங்கை சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில், தங்க விலையில் சற்று வீழ்ச்சி காணப்படுவதாக இன்றைய தங்க நிலவரம் மூலம் தெரிய வருகிறது. அதனடிப்படையில், தங்கம் ஒரு அவுன்ஸ் விலை ரூபாய் 623,418.00 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 24 கரட் தங்கத்தின் பெறுமதி 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 22,000.00 24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 175,950.00 22 கரட் தங்கத்தின் விலை 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,170.00 22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 161,350.00 21 கரட் தங்கத்தின் இன்றைய நிலவரம் 21 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 19,250.00 21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 154,000.00  என்ற அடிப்படையில் இன்றைய தங்க நிலவரம் பதிவாகியுள்ளது.

தொடர்ந்தும் உயரும் அமெரிக்க டொலரின் பெறுமதி! மத்திய வங்கி அறிவிப்பு.....

Image
  நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று அமெரிக்க டொலரின் பெறுமதியில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி 368.90 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 357.55 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. எவ்வாறாயினும், ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக ரூபாயின் மதிப்பில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. வேறு வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதி    அதேநேரத்தில் பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு தளம்பல் நிலையில் உள்ளது. அந்தவகையில், யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 371.69 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 356.26 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அதேவேளை, ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 432.04 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 415.01 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

நீண்ட காலத்திற்குப் பின்னர் திறக்கப்படவுள்ள தாமரை கோபுரம்! வெளிநாட்டவர்களுக்கு டொலர்களில் கட்டணம்...

Image
  ஆசியாவிலே மிக உயரமான கட்டடம் என அழைக்கப்படும் கொழும்பில் உள்ள  தாமரை கோபுரம்   திறக்கப்படவுள்ளதாக அதிபர் செயலகம் அறிவித்துள்ளது. மேலும், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் தாமரை கோபுரம் வணிக நடவடிக்கைக்காக திறக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இலங்கை மக்களுக்காக சாதாரண கட்டணம் 500 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்கான வரம்பற்ற கட்டணம் 2000 ரூபாயாகும். வெளிநாட்டவர்களுக்கான கட்டணம்  அதேவேளை, வெளிநாட்டவர்களுக்கான கட்டணம் 20 அமெரிக்க டொலர்கள் எனவும் அதிபர் செயலகம் தெரிவித்துள்ளது. சீனா அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் இந்த கோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதன் நிர்மாணப் பணிகள் முடிவடைந்து நீண்ட காலம் சென்றுள்ள நிலையில், அதனை திறக்கும் நடவடிக்கை தாமதமாகி உள்ள நிலையில் எதிர்வரும் 15ஆம் திகதி திறக்கப்படவுள்ளது.

இந்தியாவின் முடிவால் இலங்கைக்கு காத்திருக்கும் நெருக்கடி...!

Image
கோதுமை மா ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளதால் இலங்கைக்கான மா இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் வர்த்தக அமைச்சிற்கு தெரிவித்துள்ளனர். ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக கோதுமை மா இறக்குமதியை இந்தியா நிறுத்தியுள்ளது. எனவே, கோதுமை மா இருப்பை தக்க வைக்க  இந்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.         இந்தியாவால் இலங்கைக்கு சிக்கல்... இந்தியாவில் இருந்தே கோதுமை மாவை இலங்கை இறக்குமதி செய்து வந்துள்ளது. எனினும் விரைவில் இந்தியாவில் இருந்து கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பு முழுமையாக இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது துருக்கியில் இருந்து மாத்திரமே கோதுமை மாவை இறக்குமதி செய்ய முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.       கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு... இதனால் கோதுமை மாவிற்கு கடுமையாக தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதென சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியாவில் பண்டாரவன்னியன் சதுக்கம் பெயர்ப் பலகை அகற்றம்: மக்கள் விசனம்...

Image
  தேசிய  மாவீரன் பண்டாரவன்னியன் சதுக்கம் எனும் பெயர்ப்பலகை வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 4 நாட்களின் பின் நீக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.  தேசிய மாவீரன் பண்டார வன்னியனின் 219 ஞாபகார்த்த விழாவினை முன்னிட்டு வவுனியா நகரசபையினரினால் கடந்த 25ஆம் திகதி நகர மத்தியில் தேசிய மாவீரன் பண்டாரவன்னியன் சதுக்கம் என பெயர்ப் பலகை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெயர்ப் பலகை திறந்து வைக்கப்பட்டு 4 நாட்கள் கடந்த நிலையில், 29ஆம் திகதி குறித்த பெயர்ப் பலகை வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபடுபவர்களினால் அகற்றப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்தி பணி இவ்விடயம் தொடர்பில் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபடுபவர்களிடம் கேட்ட போது, குறித்த வீதி செப்பனிடப்படும் பணிகள் எமது நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படுவதுடன் அபிவிருத்தி பணிகளுக்கு இடையூரான நிலையில் குறித்த பெயர்ப் பலகை காணப்பட்டமையினால் அதனை நாம் அகற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர். பெயர்பலகை வைப்பதற்குரிய நடவடிக்கை இது தொடர்பில் வவுனியா நகரசபையினரிடம் கேட்ட போது, வீதி அபிவிருத்தி பணிக்காக பெயர்ப் பலகை அகற்றப்பட்டுள்ளதுடன், பண

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் யாழ்.பல்கலைக்கழகத்திற்கு உதவும் சீனத் தூதரகம்.....

Image
  சீனத் தூதரகத்தால்   42 மில்லியன் ரூபா பெறுமதியான உதவிப் பணம் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இதற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களின் விவரம், சீனத் தூதரகத்துக்கு இன்று அனுப்பிவைக்கப்படவுள்ளது. இந்த உதவித் தொகை வழங்கும் நிகழ்வில் சீனத் தூதுவர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரியவருகின்றது. யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் கண்டனம்.... இருப்பினும், சீனத் தூதுவர் இனப்படுகொலை தொடர்பில் தெரிவித்த கருத்துக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ள நிலையிலும், யாழ்.பல்கலைக்கழகத்தினுள் சீனச் சார்பு நடவடிக்கைகளை அவர்கள் வெளிப்படையாக எதிர்த்துள்ள நிலையிலும் இந்த உதவித் தொகை வழங்கப்படுமா என்பது சந்தேகமாகியுள்ளது.             சீனாவின் உதவி திட்டம் சீனத் தூதரகம் நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு 2016ஆம் ஆண்டிலிருந்து வருடாந்தம் இந்த உதவித் தொகையை வழங்கி வருகின்றது. இந்த ஆண்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாண பல்கலைக்கழக மாணவர்களுக்கே உதவித் தொகையை வழங்கச் சீனத் தூதரகம் தீர்மானித்துள்ளது. கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஏற்கனவே உதவித் தொகை வழங்கப்படுகின

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் தீர்வு தருவது ரணிலுக்கு சவாலாக அமையும்: சந்தியா எக்னலிகொட...

Image
  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விசாரணை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்கு சர்வதேச ரீதியாக நம்பகமான பொறிமுறையை அறிமுகப்படுத்துவது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சவாலான விடயம் என காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட கருத்து தெரிவித்துள்ளார்.   வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்  இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் சபையும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் விசாரணை செய்யும் இலங்கைப் பொறிமுறையில் நம்பிக்கை இழந்து வருகின்றது. ஆயுதப் போராட்டங்கள் அல்லது அரசியல் மோதல்களில் உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான மனிதர்கள் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் போயுள்ளனர். அவர்களின் சடலங்கள் இறுதிச் சடங்குகள் கூட செய்யாமல் புதைக்கப்பட்டன. அதேபோல் இலங்கையின் உள்நாட்டுப் போரில் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்ட போதிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்ததும் அந்த அலுவலகத்துக்கு தமக்கு நெருக்கமானவர்கள

விடுதலைப்புலிகளுக்காகக் குரல் கொடுத்தவரை பைத்தியம் என கூறிய எம்.பி!

Image
  “தமிழீழ விடுதலைப்புலிகளுக்காகக் குரல் கொடுக்கும் விக்னேஸ்வரன் பைத்தியக்காரனாகவே இருக்கவேண்டும்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். ‘புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்பட்டது போல், தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையும் நீக்கப்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் எம்.பி. குறிப்பிட்டுள்ளாரே’ என்று ஊடகம் ஒன்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பியிடம் இன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு காட்டமாகப் பதிலளித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “விடுதலைப்புலிகளை மீண்டும் தாலாட்டுவதற்கு விக்னேஸ்வரன் முற்படுகின்றாரா? அவருக்கு வயதுபோய் விட்டது. நீதியரசர் பதவியை வகித்தவரே விக்னேஸ்வரன். எதற்காக அவர் இப்படிக் கதைக்கின்றார். அவருக்கப் பைத்தியம் பிடித்து இருக்க வேண்டும். அவர் கூறும் வழியில் எமக்கு டொலர் தேவையில்லை” என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கட்சிதாவல் ஆரம்பம் ;13 எம்பிக்கள் எதிர்க்கட்சியில் அமர தீர்மானம்!

Image
  ஆளுங்கட்சியின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக எதிர்க்கட்சியில் அமர்வதற்கு தீர்மானித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) விசேட உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியானது கொள்கையின்றி செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  முன்னாள் ஜனாதிபதியின்  கொள்கை உரை இந்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வின் போது முன்னாள் ஜனாதிபதி ஆற்றிய கொள்கை உரையில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் இன்று இந்தக் கட்சியில் இருந்து விலகிச் சென்றுள்ளதாகவும் அவர் ஜீ.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டினார். பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், டளஸ் அலகப்பெரும, டிலான் பெரேரா, நாலக கொடஹேவா, பேராசிரியர் சரித ஹேரத், பேராசிரியர் சன்ன ஜயசுமன, கே.பி.எஸ் குமாரசிறி, குணபால ரத்னசேகர, உதயன கிரிந்திகொட, வசந்த யாப்பா பண்டார, மருத்துவர் உபுல் கலப்பத்தி, மருத்துவர் திலக் ராஜபக்ஷ, லலித் எல்லாவல ஆகியோரே இவ்வாறு சுயாதீனமாக எதிர்க்கட்சியில் அமர்வதற்கு தீர்மானித்துள்ளனர்.

யுத்தக் குற்றவாளிக்கு இலங்கையில் உயர் பீட விருது - கஜேந்திரன் விசனம்......

Image
  சர்வதேசத்தினால் யுத்தக்குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இலங்கையின் பௌத்த உயர் பீடம் விருது வழங்கி கௌரவிப்பது எந்த வகையில் நியாயமானது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது. யுத்தக் குற்றவாளிளை பாதுகாக்கும் அல்லது அவர்களுக்கு கௌரவம் வழங்கும் செயற்பாடுகளே தொடர்ந்தும் இலங்கையில் இடம்பெறுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எதிர்ப்பு போராட்டத்தின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மகாமான்ய பிரதாபாதிகேஷ்வர விருது சிறிலங்கா பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு அஸ்கிரி மகா விகாரையின் அபினந்த விழாவில் வைத்து மகாமான்ய பிரதாபாதிகேஷ்வர விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட நிலையிலேயே செல்வராசா கஜேந்திரன் தனது விசனத்தை வெளிப்படுத்தியுள்ளார். நாட்டுக்கும், பெளத்த மதத்துக்கும் தேசிய பாதுகாப்புக்கும் சவேந்திரசில்வா ஆற்றிய சேவைகளை கெளரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக அஸ்கிரி மகா விகாரை நிர்வாகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்

2021-2022 ஆம் கல்வியாண்டில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை....

Image
2021-2022 ஆம் கல்வியாண்டில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என ஆணைக்குழுவின் தலைவர் திரு.சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

விமான நிலையத்தில் பல கோடி ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்கள்.

Image
  சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வர முட்பட்ட சுமார் 16 கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 6 கிலோ 995 கிராம் எடையுள்ள 60 தங்க பிஸ்கட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது. அதன் பெறுமதி 157 மில்லியன் ரூபா என  விமான நிலைய சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். தங்க பிஸ்ட்கள் பறிமுதல் தீர்வை வரியற்ற வர்த்தக நிலையத்தின் ஊழியர் ஒருவரும் இதன் போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபர் ஜாஎல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த தங்க பிஸ்கட்டுகள் 24 காரட் தங்கம் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது. அதிகாரிகளால் பறிமுதல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இலங்கை சுங்கப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து பாரிய அளவிலான பழைய உலோகங்களை ஏற்றுமதி செய்ய முயன்ற மூவரை இலங்கை சுங்கப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

அரச நிறுவனங்களில் கட்டாயமாகும் நடைமுறை - விசேட சுற்று நிருபம் வெளியீடு

Image
  அரச நிறுவனங்களுக்கு வரும் ஒவ்வொரு தொலைபேசி அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல் செய்திகளுக்கும் கட்டாயம் பதிலளிக்க வேண்டும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே விசேட சுற்று நிருபமொன்றை விடுத்துள்ளார். அரச நிறுவனங்களுக்கு மக்கள் சமர்ப்பித்துள்ள பிரச்சினைகள் மற்றும் விசாரணைகளுக்கு பதில் அளிப்பதில் தாமதம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் இந்த விசேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பணிப்புரையின் பேரில் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. மின்னஞ்சல்களை கையாள  அதிகாரி நியமிக்க வேண்டும் இதன்படி, அரச நிறுவனங்களால் பெறப்பட்ட கடிதத்திற்கு இறுதிப் பதில் வழங்க முடியாத பட்சத்தில், ஒரு வாரத்திற்குள் கடிதம் கிடைக்கும் வகையில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இடைக்கால பதில் அனுப்பி, இறுதிப் பதிலை வழங்க வேண்டும் என சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பதில் கடிதத்தின் கையொப்பத்திற்குக் கீழே விடயத்தி